ரொம்ப மோசமான நிலையில் இருக்கேன்… சின்னத்திரை சமந்தாவின் ஷாக்கிங் நியூஸ்!

Pavithra Lakshmi: பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை பவித்ர லட்சுமி வெளியிட்டிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் சின்ன வருடத்தில் நடித்தவர் பவித்ர லட்சுமி. ஆனால் அதைத்தொடர்ந்து அவர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ச்சியாக நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் மாடலிங் செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. சமையல் தெரியாத போதும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு உள்ளே வந்தார். ஒரு பக்கம் சமையல் கற்றுக்கொண்டு இன்னொரு பக்கம் தன்னுடைய மார்க்கெட்டையும் அதிகரித்துக் கொண்டார்.

WhatsApp Image 2025 04 23 at 1.12.50 PM

தன்னுடைய காமெடி திறமையை ஒரு பக்கம் சமையல் திறமையை ஒரு பக்கம் என வகையாக காட்டி பைனல் வரை முன்னேறி சென்றார். பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் அவருடைய பெயர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது.

அதைத்தொடர்ந்து அவருக்கு சதீஷ் நடிப்பில் உருவான நாய்சேகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் ஹீரோயினாக அவர் நடித்திருந்தாலும் படம் பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடையவில்லை. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக அவர் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பல காலம் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தவர் தற்போது மீண்டும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக மாறி இருக்கிறார். அவரின் முகத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பப்லியான முகத்தோற்றம் மாறி ஒல்லியாக யாரையோ பார்ப்பது போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகழ்ச்சிக்காக தன்னுடைய முகத்தை இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் பவித்ர லட்சுமி கூறும்போது தான் மிகுந்த மோசமான நிலையில் இருக்கிறேன். எனக்கு உடல்நிலை பிரச்சினை இருக்கிறது.

அதற்காக சிகிச்சையில் இருப்பதால்தான் என்னுடைய உடல்நிலையில் மாற்றம் இருக்கிறது. நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் செல்லவில்லை. வதந்திகளை பரப்பி என்னுடைய கடினமான சூழ்நிலைகளை மேலும் கடினமாக்கி விடாதீர்கள் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நன்றி

Leave a Comment