Gangers: கேங்கர்ஸ்ல வடிவேலு ஆட்டம் குளோஸ்… சுந்தர்.சி. இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாமோ..!

Gangers: வடிவேலு, சுந்தர்.சி.கூட்டணியில் 14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இன்று வெளியாகும் படம் கேங்கர்ஸ். இந்தப் படத்திற்கு முன்னர் 2010ல் நகரம் மறுபக்கம் படத்தில் தான் இவர்கள் இணைந்தனர். இந்தப் படத்தில் இவர்களது காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வயிறு குலுங்க சிரிக்க வைத்தது இந்தக் கூட்டணி. மீண்டும் இதே காம்போ இணைவதால் கேங்கர்ஸ் படத்துக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வாணிபோஜன், கேத்தரின் தெரசா ஆகிய இரு கதாநாயகிகள் உள்ளனர்.

மீண்டும் பழைய படி வடிவேலு இந்தப் படத்தில் பாடிலாங்குவேஜ், டயலாக் எல்லாவற்றையும் கொண்டு வந்துள்ளார். ஆனால் உடல் பருமன் ஆகி முகம் எல்லாம் வீங்கிப் போய் இருந்தாலும் அந்தப் பழைய காமெடி டயலாக் வாடை நம்மை ரசிக்க வைக்கிறது.

சுந்தர்.சி.யைப் பொருத்தவரை மதகஜராஜா, அரண்மனை 4 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்த கேங்கர்ஸ் படமும் வெற்றி பெறும் பட்சத்தில் ஹாட்ரிக் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பார்த்து விட்டு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

Gangers: கேங்கர்ஸ்ல வடிவேலு ஆட்டம் குளோஸ்… சுந்தர்.சி. இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாமோ..!

வடிவேலுவோட லேடி கெட்டப் நல்லாருக்கு. பாட்டு பெரிய அளவில் இல்லை. சிரிப்பு ஒண்ணும் பெரிசா இல்லை. பர்ஸ்ட் ஆஃப்ல ஒண்ணும் இல்லை. ரெண்டு பேரும் இன்னும் ஒர்க் அவுட் பண்ணி எடுத்துருக்கலாம். செகண்ட் ஆஃப்ல தான் கொஞ்சம் பார்க்கற மாதிரி இருந்தது. லாஜிக் இல்லாம பார்த்தா யாரு வேணாலும் பார்க்கலாம். வடிவேலுவை பிடி சாரா பார்க்கவே முடியல. அவரோட லுக் ஒத்து வர மாட்டேங்குது என்கிறார்கள். மேற்கண்ட தகவல் Black pepper News என்ற யூடியூப் சேனலில் இருந்து எடுக்கப்பட்டது.

நன்றி

Leave a Comment