Gangers: இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது குட் பேட் அக்லி திரைப்படம். ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வெளியான இந்த படம் பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி வசூலிலும் சாதனை படைத்திருக்கிறது. அஜித் கேரியரிலேயே இந்த படம் தான் அதிக வசூலை சந்தித்த படமாக அமைந்திருக்கின்றது. அதுவும் சோலோவாக ரிலீஸ் ஆன படமாக இருந்ததனால் கலெக்ஷனில் வாரி குவித்து இருக்கிறது.
குட் பேட் அக்லி திரைப்படத்தோடு வேற எந்த நடிகர்களின் படங்களும் இந்த இரண்டு வாரங்களுக்குள் ரிலீசாகவே இல்லை. அதுவே இந்த படத்திற்கு ஒரு பெரிய பிளஸ். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஆயுள் முடிவடைய போகிறது. ஏனெனில் வரும் 24ம் தேதி சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
இந்த படத்தை பற்றி பெரிய அளவில் சுந்தர் சியும் வடிவேலுவும் பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அவர்கள் சொல்வதிலிருந்து படத்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல 15 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்த படமாக இருப்பதினால் இந்த படத்தின் மீது ஒரு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது .
அதனால் குட் பேட் அக்லி திரைப்படத்தை எடுத்துவிட்டு கேங்கர்ஸ் திரைப்படத்தை தான் முழுவதுமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் ரிலீஸ் செய்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 ஸ்கிரீன்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

அதன் பிறகு படத்தின் ரிசல்ட்டை பார்த்து இதனுடைய ஸ்கிரீனை அதிகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக சுந்தர்சியின் படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்து வருவதால் இந்த கேங்கர்ஸ் திரைப்படமும் அப்படி ஒரு எதிர்பார்ப்பில் தான் வெளியாக இருக்கின்றது.