தனுஷ் அடுத்த படம் இயக்குனார் வெங்கட் பிரபுவா ? DxV
கர படம் முடிந்த கையோடு அடுத்த ராக்கெட் ஸ்பேட்லில் உருவாகி இருக்கும் படம் தான் ஓம் என்ற படமும் தற்போது படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், அடுத்து இவரை வைத்து படம் பண்ண பல இயக்குநர்கள் வரிசையில் இருக்கிறார்கள். ஏற்கனவே சில படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனுஷ் ஒரு புதிய போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸ்-இல் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் DxV என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும்போது இயக்குநர் யாராக இருப்பார் என ஆராய்ந்ததில், வெங்கட் பிரபு-தனுஷ் கூட்டணி அமையவுள்ளது என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஜூலை 10ஆம் தேதி வெளியாக உள்ளது. also read :அப்பா மகன் மோதலா ஜனநாயகன் vs சிக்மா
Read moreஅப்பா மகன் மோதலா ஜனநாயகன் vs சிக்மா
நடிகர் விஜய் சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து, அரசியலில் இணைந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியுள்ளார். அவர் நடிக்கும் கடைசிப் படம் “ஜனநாயகன்”. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் அடித்த “பகவந்த் கேசரி” படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறும் விஜய்க்குப் பொருத்தமான கதையாகவும் மாற்றி எடுக்கப்பட்ட படம் இதுவாகும். ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில், தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெறாததால் படம் திரைக்கு வரவில்லை. இதற்குப் பின்னணியில் சில அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வரும் 23-ம் தேதி “ஜனநாயகன்” படம் வெளியாகலாம் என பலரும் கூறுகின்றனர். அப்படி அன்று வெளியாகவில்லை எனில், ஜூலை 31-ம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” படமும் ஜூலை 31-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜயை வைத்து “மாஸ்டர்”, “லியோ”
Read moreலோகேஷ் கனகராஜ் ‘DC’ படம்: அனிருத் இசையில் ‘HANGOVA’ பாடல் வெளியீடு!
ஹீரோவாக மாறிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜின் ‘DC’ படத்தின் அனிருத் இசையில் இரண்டாவது பாடல் வெளியீடு : ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘கூலி’ போன்ற படங்களை இயக்கி இந்திய சினிமாவிலேயே பெரிய அளவில் அடையாளம் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மாஸ் காட்டி வந்த அவர், இப்போது முதன்முறையாக கதாநாயகனாக திரைக்கு வருகிறார். அந்த படம்தான் ‘DC’. ‘தேவதாஸ்’ மற்றும் ‘சந்திரா’ என இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை இணைத்தே இந்த படத்திற்கு ‘DC’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கலாநிதி மாறன் தலைமையிலான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’, தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இதை இயக்கியுள்ளார். நவீன கால கேங்க்ஸ்டர் காதல் கதை என்ற பின்னணியில், அதிரடி ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலாக ‘Raga of
Read moreபிரதீப் ரங்கநாதன் புது அவதாரம் – தயாரிப்பாளராக அடியெடுத்து வைப்பு! PR SHOW-வுடன் புது பயணம்
Gen Z தலைமுறை இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இப்போ தயாரிப்பாளராகவும் மாறி புது history படைக்கிறார் “கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னாடி “லவ் டுடே” மற்றும் “டிராகன்” படங்களில் நடித்து கோலிவுட்டில் தன்னை ஒரு முக்கிய நடிகராக நிலைநிறுத்திக் கொண்டவர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்த “எல்.ஐ.கே” திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூல் வாரி வராத நிலையில், பிரதீப் இப்போது புதிய பாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார் – தயாரிப்பாளர் என்ற அவதாரத்தில்! “PR SHOW” என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கும் பிரதீப், இதன் மூலம் முதல் படத்தையும் அறிவித்திருக்கிறார்.இந்த புதிய படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இவருடன் அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். குறிப்பாக, அஸ்வத் மாரிமுத்து இயக்குனராகவும் அறியப்பட்டவர் என்பதால், இவர் இந்த படத்தில் நடிப்பது கவனிக்கத்தக்க விஷயமாக
Read moreஅனிருத்-காவ்யா மாறன் கல்யாணம் நிச்சயம்! மாமா ஒய்.ஜி. மகேந்திரன் பேச்சு வைரல்
அனிருத்-காவ்யா மாறன் திருமணம் குறித்த புது தகவல் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறனுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக பேசப்பட்டு வந்த திருமண தொடர்பான யூகங்கள், இப்போது புது வேகம் பெற்றுள்ளன. அனிருத்தின் மாமாவும், மூத்த நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன், இந்த திருமணம் “நிச்சயம்” நடக்கும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பதே இதற்குக் காரணம். ஒய்.ஜி. மகேந்திரன் என்ன சொன்னார்? குட்டி பத்மினியின் KPTV சேனலில் இடம்பெற்ற ஒரு பேட்டியில், அனிருத்-காவ்யா உறவு குறித்து நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது, ஒய்.ஜி. மகேந்திரன் அனிருத்தை பாராட்டிப் பேசினார். “அவன் ரொம்ப சாஃப்ட் பையன். இந்த தருணத்தில் அவனுக்கு நான் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். அவனுக்கு ஒரு பெரிய திருமணம் நடக்கவிருக்கிறது” என்று குறிப்பிட்டார். இது வெறும் வதந்தியா என்று மீண்டும் கேட்கப்பட்டதற்கு, “எனக்குக் கிடைத்த தகவலின்படி, இது நிச்சயம். இருவரும் திருமணம்
Read moreஆமிர் கான் 3வது திருமணம்: 61 வயதில் கௌரி ஸ்பார்ட்டை மணந்த நடிகர்!
ஆமிர் கான் – கௌரி ஸ்பார்ட் திருமணம்: மூன்றாவது முறையாக மாப்பிள்ளையான பாலிவுட் நடிகர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர் கான் (61), தனது நீண்ட கால நெருங்கிய தோழியான கௌரி ஸ்பார்ட்டை (47) ஜூலை 5ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். மும்பையில் உள்ள அவரது சொந்த இல்லத்திலேயே இந்நிகழ்ச்சி மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. ஆடம்பரமான விழாக்கள் எதுவும் இல்லாமல், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் சில நண்பர்களும் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். சட்டப்பூர்வ பதிவு எப்படி நடந்தது? அமீர் கானும் கௌரியும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணம் திருமண சிறப்புச் சட்டத்தின் (Special Marriage Act) கீழ் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை மூலம் திருமணத்திற்குச் சட்டப் பாதுகாப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அமீர் கானின் வார்த்தைகளில்… திருமணத்திற்கு முன் இது குறித்துப் பேசிய அமீர் கான், தான் ஜூலை 5ஆம் தேதி தனது
Read moreலேடி சூப்பர்ஸ்டார் பேயாக நடிக்கிறார் — காஞ்சனா 4 ஷூட்டிங் அப்டேட் இதோ!
நயன்தாரா ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’-க்காக எடுத்த அதிரடி முடிவு! முனி, காஞ்சனா 1, 2, 3 என காமெடி ஹாரர் ஜானரில் தனக்கென தனி இடம் உருவாக்கிக்கொண்ட ராகவா லாரன்ஸ், சில காலம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் காஞ்சனா 4-ஐ உருவாக்கி வருகிறார். இந்த முறை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பேய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியிருக்கிறது. காஞ்சனா 4 ஷூட்டிங் இப்போது எங்கே நடக்கிறது? பனையூரில் அமைக்கப்பட்ட சிறப்பு செட்டில் 130 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. தற்போது படக்குழு TR கார்டனுக்கு இடம் மாறி நயன்தாராவின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை இரவு நேரத்தில் படமாக்கி வருகிறார்கள். பூஜா ஹெக்டே மற்றும் நோரா பதேகி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இரவு ஷூட்டிங்கிற்கு நயன்தாரா ஏன் ஒப்புக்கொண்டார்? இதுவரை தனது இரண்டு மகன்களான உயிர் மற்றும் உலகுக்காக இரவு நேர ஷூட்டிங்கை நயன்தாரா கண்டிப்பாக தவிர்த்து வந்தார்.
Read moreகட்டா குஸ்தி 2 விமர்சனம் — முதல் பாகத்தை மிஞ்சியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
கட்டா குஸ்தி 2 விமர்சனம் — முதல் பாகத்தின் மேஜிக் மீண்டும் கிடைத்ததா? 2022ல் வெளியான கட்டா குஸ்தி முதல் பாகம் சிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே கூட்டணியில் இப்போது வந்திருக்கும் கட்டா குஸ்தி 2 விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது — படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? கட்டா குஸ்தி 2 கதை என்ன? முதல் பாகத்தில் மல்யுத்த வீராங்கனையான ஐஸ்வர்யா லட்சுமி, விஷ்ணு விஷாலை திருமணம் செய்த பிறகு நடந்த சம்பவங்கள் கதையாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் மனைவியை சாம்பியன் ஆக்கவேண்டும் என்று கணவனாக விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா லட்சுமியின் மல்யுத்த பயிற்சியாளரே எதிரியாக மாறி, கணவரையே ஏமாற்றி அவரது சாம்பியன் கனவை உடைக்கிறார். அதற்கு பிறகு கதை எப்படி போகிறது என்பதே படத்தின் மீதி. இயக்குநர் செல்வா அய்யா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “முதல் பாகத்தைப்
Read moreஜெயிலர் கேமியோவிற்கு பிறகு சிவராஜ்குமார் அடுத்த அதிரடி — 666 டீசர் வைரல்!
சிவராஜ்குமாரின் 666 டீசர் வெளியானது — 5 மொழிகளில் வரும் ஸ்பை த்ரில்லர்! கன்னட சினிமாவின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் 666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கேமியோ வேடத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த சிவராஜ்குமார், இப்போது ஒரு பிரம்மாண்டமான ஸ்பை ஆக்சன் த்ரில்லரில் மையக் கதாபாத்திரமாக வருகிறார். 666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர் — எந்த மொழிகளில் வருகிறது? இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. பிரபல இயக்குநர் ஹேமந்த்.எம்.ராவ் இயக்கும் இந்தப் படத்திற்கு சரண்ராஜ் இசையமைக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? சிவராஜ்குமாருடன் பிரியங்கா மோகன், டாலி தனஞ்செயா, அதிதி பாலன், யாஷ் ஷெட்டி, அசோக் ஷர்மா, தக்ஷா வர்தன், வருண் குமார், அர்விந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பல்வேறு மொழி நட்சத்திரங்கள்
Read moreரஜினி ரசிகர்களே ரெடியா? “ஜெயிலர் 2” ரிலீஸ் டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
ரஜினி ரசிகர்களுக்கு பிரம்மாண்ட அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. “ஜெயிலர் 2” (jailer-2 )திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது! “ஜெயிலர்” முதல் பாகம் அமோக வெற்றி 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்”, உலகம் முழுவதும் சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பெரும் வரவேற்பை பெற்றது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு மேலும் வலு சேர்த்தனர். முதல் பாகத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வந்தது. நட்சத்திரங்கள் திரளும் “ஜெயிலர் 2” இந்நிலையில், சன் பிக்சர்ஸ் “ஜெயிலர் 2” ப்ரோமோவை ரிலீஸ் தேதியுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. மோகன்லால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவராஜ்குமார், மற்றும் இந்தி நடிகர்
Read more