Sunday, April 21, 2024
Hometrending newstamil vidukathaigal

tamil vidukathaigal

 

tamil vidukathaigal :விடுகதை என்பது கிராமப்புறங்களில் மக்களின் சிந்தனை திறனுக்கு தக்க சான்றிதழ் ஆகும் . விடுகதையில் ஒரு புதிர் உடன் கொண்டு அதில் மறைந்து இருக்கும் புதிரை கண்டுபிடிப்பதே ஆகும் .புதிர் எழுப்பி விடையளிக்குமாறு விடுகதைகள் இருக்கும் அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். இத்தகைய விடுகதைகளை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இருக்க கூடியது விடுகதை. கிராமங்களில் விடுகதை என்பது மிக சிறந்த ஒரு பொழுது போக்காக இருக்கும்.

tamil vidukathaigal

 

tamil vidukathaigal :நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன். அவன் யார்?

                                                      : வெங்காயம்

உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் .அவன் யார்?

    : கடல் அலை

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கானா நியாயம் . அது என்ன?

    : தராசு

அர்மோனியம்

தாடிக்காரன், மீசைக்காரன் கோவிலுக்கு போனால் வெள்ளைக்காரன் . அவன் யார்?

     : தேங்காய்

என் குதிரை கருப்பு குதிரை குளிப்படினால் வெள்ளை குதிரை . அவன் யார்?

        : உழுந்து

மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்வன் மண்ணோடு மன்னாவான். அவன் யார்?

       : மண்புழு

உயரத்தில் இருந்து விழுவான் அடிபடாது தரக்குத்தான் சேதாரமாகும்  .அது என்ன?

        : அருவி நீர்

பச்சை கீரை சமைக்க உதவாது வாழுக்க தான் உதவும் . அது என்ன?

         : பாசி

அடர்ந்தா காட்டில் ஒன்றையடி பாதை . அது என்ன?

       : தலைவகிடு

முதுகைத் தொட்டால் மூச்சி விடுவான் பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான் . அவன் யார்?

      : அர்மோனியம்

காது பெரியது ஆனால் கேளாது வாய் பெரியது ஆனால் பேசாது வயிறு பெரியது ஆனால் உண்ணாது . அது என்ன ? 

       : அண்டா 

ராஜா உண்டு ராணி உண்டு மந்திரியும் உண்டு ஆனால் நாடு இல்லை . அது என்ன ?

read more  MAYILSAMY ANNATHURAI ISHRO

     : சீட்டு கட்டு

 மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வராது . அது என்ன ? 

   : வயது 

வைகை வைகையாய் தெரியும் வண்ணப்படம் கண்மூடிக் காணும் காட்சிப்படம் .அது என்ன ?

      : கனவு 

 மென்மையான  உடம்புக்கரான்  பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் . அவன் யார் ?

     : நத்தை 

 அனலில் பிறப்பான் ஆகாயத்தில் பரப்பான் . அவன் யார் ?

    : புகை 

வாலிலே எண்ணெய் தலையிலே கொள்ளி . அது என்ன ?

   : விளக்குத் திரி

ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது . அவர்கள் யார் ?

  : ஏறும்ப்புக்கூட்டம்

 காலில் தண்ணீர் குடிப்பான் தலையில்  முட்டையிடுவான் . அவன் யார் 

  : தென்னைமரம் 

 சுற்றும் போது மட்டும் சுகம் தரும் . அது என்ன ?

  : மின் விசிறி  

tamil vidukathaigal

 

tamil vidukathaigal: கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைக் கண்டு பதைபதைக்கிறான் . அவன் யார் 

       :  நெருப்பு 

மேலிலும் துவாரம் கிழிலும் துவாரம் வளத்திலும் துவாரம் இடதிலும் துவாரம் உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன் . நான் யார் ?

  : பஞ்சு 

 கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ. அது என்ன ?

  : உப்பு 

கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான் .அவன் யார் ?

   :  சோளக்கதிர் 

கடலில் கலக்காத நீர் எவரும் குடிக்காத நீர் . அது என்ன ?

 :கண்ணீர் 

கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் .அது என்ன ?

   : வேம்பு 

தொட்டு பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது . அது என்ன ?

 : முதுகு 

 கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான் . அவன் யார் 

  : சேவல்  

 ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க ஸ்ரீ ரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க ஒருவன் மட்டும் தூங்கவில்லை . அவன் யார் ?

 : மூச்சி

 ஏற்றி வைத்து அணைத்தல் எரியும் வரை மணக்கும் . அது என்ன ?

 : ஊதுபத்தி 

அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது . அது என்ன ?

 : தண்ணீர் 

வேட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் .அவன் யார் ?

 : கத்தரிக்கோல் 

அதட்டுவான் அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டன் . அவன் யார் ?

 : நக்கு 

ஓடியாடி வேலை செய்தபின் முலையில் ஒதுங்கிக் கிடப்பாள் . அவள் யார் ?

read more  malayalam actress photos

 : துடைப்பம் 

tamil vidukathaigal : ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன்              கண்பட்டு         உடைந்ததாம் மண்டபம் . அது என்ன ?             

 : தேன் கூடு 

 படுத்துத் தூங்கினால் கண் முன் ஆடும் அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் .அது என்ன ?

 : கனவு 

 விரல் இல்லாமலே ஒரு கை . அது என்ன?

  : உலக்கை 

தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரை சீரழிப்பாள். அவள் யார் ?

: மீன் வலை 

அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன் இரவுக்காவல் காரன் ஒருவன் .அவர்கள் யார் ?

 : சூரியன்  சந்திரன் 

நான் பார்த்தால் அவன் பார்ப்பான் நான் சிரித்தால் அவன் சிரிப்பான்.  அவன் யார்? 

 : கண்ணாடி  

 கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும் தான் ?

 : வெங்காயம் 

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் . அவன் யார் ?

 : கரும்பு 

  வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ . அது என்ன ?

 : சிரிப்பு 

 ஏரியில் இல்லாத நீர் தாகத்திற்கு உதவாத நீர் தண்ணீர் அல்ல . அது என்ன ?

 :கண்ணீர் 

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் . அவள் யார் ?

: மெழுகுவர்த்தி 

ஓர் அரண்மையில் முற்பதிரேண்டயிரம் காவலர்கள் . அது என்ன ?

 :பற்கள் 

ஊரெல்லாம் சுத்துவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் .அவன் யார் ?

: செருப்பு

வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை .அது என்ன ?

: உழுந்து

திடீரென்று வந்த வெளிச்சம் அப்புறம் தொடர்ந்து கடபுடா சத்தம் . து என்ன ?

: மின்னல் இடி 

ஒருவரை மற்றவர் துரத்தி துரத்திக் காலம் கட்டினார்கள் .அவர்கள் யார் ?

: கடிகாரம் சின்னமுள் , பெரியமுள் 

 சட்டை இல்லாமேலே பை வைத்தவன் தாவுவதில் கெட்டிக்காரன் . அவன் யார் ?

 :கங்காரு 

மேலிருந்து வருவான் கிழ் இருந்தும் வருவான் . அவன் யார் ?

 :மழை தண்ணீர் , கிணற்றுத் தண்ணீர் 

tamil vidukathaigal

 

tamil vidukathaikal
tamil vidukathaikal

தலையில்  கிரீடம்  வைத்த தங்க பழம் அது என்ன ?

 : அன்னாசிப்பழம் 

ஓடியாடி வேலை செய்தபின் முலையில் ஒதுன்க்கிடப்பாள் .

: துடைப்பம் 

கை பட்டால் சிணுங்கும் கன்னிப்பெண் கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பன். அவள் யார் ?

  : காலினங்பேல்

கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான் . அவன் யார் ?

: கரும்பு  

உடம்பில்லா  ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான் ? அவன் யார் ?

: வெங்காயம் 

கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான் . அவன் யார் ?

read more  ACTOR விஜய்| tamil cinema news

   : பூரி

ஒரு அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அவர்கள் யார் ?

 :  பற்கள் 

இலையுண்டு கிளையில்லை பூ உண்டு மணமில்லை காய் உண்டு விதையில்லை பட்டை உண்டு கட்டை இல்லை கன்று உண்டு பசு இல்லை . அது என்ன ?

: வாழை 

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான் .பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் . அது என்ன ?

 : சோளம் 

ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவான் ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவான் .அவன் யார் ?

: நெருப்பு 

படப்படக்கும் பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் . அது என்ன ?

: பட்டாசு 

 வாள் இல்லாமல் கேடயம் மட்டும் வைத்திருப்பான் .போருக்கு போகாத வீரனவன் . அவன் யார் ?

: ஆமை 

மேலும் படிக்க :HARMFUL EFFECTS OF AJINOMOTO IN TAMIL 2023: அஜினோமோட்டோவின் தீய விளைவுகள்

 

மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள் . அது என்ன ?

 : நட்சத்திரம் 

முகம் பார்த்து வளரும் , முடிவில்லாமல் தொடரும் . அது என்ன ?

 : சொந்தம் 

வயிற்றில் விரல் சுமப்பான் , தலையில் கல் சுப்பான் .அவன் யார் ?

 : மோதிரம் 

 நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக் கொள்ள துணி இல்லை . அவன் யார் ?

 :சிலந்தி 

ஐந்து  அடுக்கு நாலு இடுக்கு . அது என்ன ?

 : கை விரல்கள்

இரவல் கிடைக்காதது . இரவில் கிடைப்பது . அது என்ன ?

 : தூக்கம் 

தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான் . அவன் யார் ?

 : நுங்கு 

காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல .அது என்ன  ?

 :  முள் 

கறுப்புச் சட்டைக்காரன் சட்டையைக் கழற்றினால் வெள்ளைக்காரன் . அவன் யார் ?

 : உழுந்து 

காற்றை குடித்து காற்றிலே பார்ப்பான் . அவன் யார் ?

 : பலூன் 

அடிக்காமல் திட்டாமல் கண்ணீர் வரவழைப்பான் .அவன் யார் ?

 : வெங்காயம் 

ஓயாமல் இரையும் இயந்திரம் இல்லை உருண்டோடி வரும் பந்தும் இல்லை . அது என்ன ?

 :கடல் 

உணவை எடுப்பான் . ஆனால் உணவை உன்னமாட்டான் .அவன் யார் ?

 : அகப்பை 

 உயரப் பறப்பவனுக்கு வால் உண்டு கால் இல்லை .அவன் யார் ?

 : பட்டம்

ஒன்று போனால்  மற்றொன்று வாழாது .அது என்ன ?

 :செருப்பு 

ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் இன்னொருவன் ஓடுவான் .அவன்

யார் ?

 :கடிகாரம் 

 சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது .அது என்ன ?

 : காய்ந்த மிளகாய் 

read more  விஜய் படத்தின் அடுத்த அப்டேட்| tamil cinema news

நாக்கு இல்லாமவிட்டடால் இவனுக்கு வேலையில்லை .அவன் யார் ?

 : மணி 

tamil vidukathaigal

 கட்டை போல் இருந்தவன் வெட்டி வெட்டிக் பிழிந்தால் ருசியோ ருசி . அது என்ன ?

   : கரும்பு 

அறுக்க உதவாத கருக்கு அரிவாள்  . அது என்ன ?

 : பிறை நிலா 

எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது .அது என்ன ?

 : குருவிக்கூடு 

என்னை பார்த்தால் ,உன்னை காட்டுவேன் . நான் யார் ? 

  : காண்னடி  

tamil vidukathaikal
tamil vidukathaikal

 ஒரு கிணற்றில் ஒரே தவளை . அது என்ன ? 

  : நாக்கு  

 செம்மன்ன்னுக்குள்ளே சிவப்பு மனிதன்  அவன் யார் ? 

 : சர்க்கரை வள்ளி கிழங்கு 

 தங்க தலையிலே பாம்பு அது என்ன ? 

  : பின்னல் 

தச்சர் கொத்தனார் செய்யாத தேர் அது என்ன ?

 : புற்று 

 வெள்ளை ரூபாயில் துள்ளி விழும் அது என்ன ? 

: மீன் 

 அடி சிவப்பு , நாடு பச்சை ,உச்சி வெள்ளை .அந்தக் கதை என்ன ?

 : வெங்காய தாள் 

 அதோ ஓடுகிறான் ஒருவன்  அவன் காலடி தெரியவில்லை . அவன் யார் ?

  : ஈ 

 

மேலும் படிக்க :palli vilum palan in tamil

 

அனைவருக்கும் அடங்காதது ஆதவனுக்கு அடங்கும் . அது என்ன ?

 : குளிர் 

 ஆடும் பொது சீரும் ஆடி குடத்தில் அடையும் . அது என்ன ?

  : எண்ணெய் 

வீட்டுதொட்டத்திலே மஞ்சள் குருவி ஊஞ்சலாடுது .அது என்ன ?

 : எழுமிச்சம்பழம் 

 என் தம்பி சின்னத்தம்பி ஓடியாடி முள் அடைகிறான் . அவன் யார் ?

 :  தையல்  ஊசி  ஒற்றை காலில் ஆடுவான் ஓய்ந்து போனால் படுப்பான் . அவன் யார் ? 

 : பம்பரம் 

 கண்ணுக்குத் தெரியாதவன் கண்ணை மறைப்பான் .அவன் யார் ?

 :  கண் இமை 

 கல்லிலே காய்க்கும் பூ தண்ணீரில் மலரும் பூ அது என்ன ?

: சுண்ணாம்பு 

காட்டிலே கரும்புச் சோலையிலே வீட்டிலே புது பானையிலே  அது என்ன ?

 : வெல்லம் 

வன்னிக்கும் பூமிக்கும் ஒரே கம்மி அது என்ன ?

  : மழை 

ஒரு முறை சட்டையை கழட்டினால் மறுமுறை அணியா மாட்டான் அது என்ன ? 

 : பாம்பு 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments