Saturday, July 27, 2024
Homeஉடல்நலம்NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை...

NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை வைத்தியம்

NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: நம்மில் பலர் அழகான முகத்தைப் பெறுவதற்கு இன்றும் பலவிதமான இராசயனக் கலவைகளை முகத்தில் பூசி கொள்கின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
தினம் ஒரு அழகுப் பொருள்கள் என மாறி மாறி உபயோகப்படுத்தி முகத் தின் பொலிவை விரைவில் இழந்துவிடுகிறார்கள். இளவயதில் சருமம் பொலிவிழந்து, முக சுருக்கங்களுடன் தோற்றமளிக்கிறது.
முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான சருமத்தை ஆயுளுக்கும் பெறலாம்.

முகப்பொடி

  • NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: உலர்ந்த மகிழம் பூ பொடி – 200 கிராம்
  • கிச்சிலி கிழங்கு பொடி – தலா 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் பொடி – தலா 100 கிராம்
  • கோரைக் கிழங்கு பொடி – தலா 100 கிராம்
  • உலர்ந்த சந்தனத்தூள் – 150 கிராம்
  • பாசிப்பயறு – 50 கிராம்

செய்முறை

  • NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை ஒன்றாகக் கலந்து அம்மியில் அல்லது மிக்ஸியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.
  • தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன் தூய்மையான பசும் பாலில் குழைத்து முகத்தில் தடவவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வரவேண்டும்.
  • இப்பொடியைப் பயன்படுத்தும் போது சோப்பு போடக் கூடாது. இதைத் தொடர்ந்து உபயோகப்படுத்திவந்தாலே நாளடைவில் சருமம் மென்மையாகவும் பளீரெனவும் இருக்கும்.
  • இதேபோல் குளியல் பொடியையும் தயாரிக்கலாம். பலவித வாசனை குளியல் சோப்புகளாலும், முகத்தில் இட்டும் பவுடர்களாலும் நாளடைவில் உடலில் ஒவ்வாவை ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது.
  • 30 வயதுக்குள் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவும் நம் ஆரோக்யத்துடன் அழகையும் அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
  • ஆனால் தற்போது இராசயனம் கலந்த உணவு வகைகளும், போதிய அளவில் நீர் அருந்தாமலும் சருமம் விரைவில் வறட்சியடைகிறது.
  • சருமம் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவே நமது மூதாதையர்கள் பிறந்த குழந்தைகளுக்குச் சோப்பை உபயோகப்படுத்தாமல் பலவித நறுமணப் பொருள்களைச் சேர்த்துக் குளியல் பொடியாக அரைத்து உபயோகப்படுத்தி வந்தார்கள். இன்றும் பலகிராமங்களில் இத்தகைய குளியல் பொடியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
read more  ORITHAL THAMARAI BENEFITS IN TAMIL 2023 | ஓரிதழ் தாமரை

சருமத்தைக் காக்கும் குளியல் பொடி

  • NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: நமது சருமத்தைக் காக்கும் குளியல் பொடியை அரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்

  • NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: கொடுத்துள்ள அனைத்து பொருள்களும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.
  • சோம்பு – 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
  • வெட்டிவேர் – 200 கிராம்
  • அகில் கட்டை – 200 கிராம்
  • சந்தனத்தூள் – 400 கிராம்
  • கார்போக அரிசி – 200 கிராம்
  • தும்மராஷ்டம் – 200 கிராம்
  • விலாமிச்சை – 200 கிராம்
  • கோரைக்கிழங்கு-200 கிராம்
  • கோஷ்டம் – 200 கிராம்
  • ஏலரிசி – 200 கிராம்
  • முழுபாசிப்பயறு – அரைக்கிலோ
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments