Sunday, September 8, 2024
Homeஉடல்நலம்BEST HEALTHY BREAKFAST IN TAMIL: காலையில சாப்பிட இதுதான் சரியான டிஷ் எது?

BEST HEALTHY BREAKFAST IN TAMIL: காலையில சாப்பிட இதுதான் சரியான டிஷ் எது?

BEST HEALTHY BREAKFAST IN TAMIL: காலை நேரத்தில் எதைச் சாப்பிட்டாலும் அந்த உணவுதான் அன்றைய நாளை நிர்ணயிக்கிறது. காலை நேரத்தில் காரமான உணவுகளை எடுத்துக் கொண்டால், வாயு மற்றும் அமிலத்தன்மை உருவாக்கத் தொடங்குகிறது.

ஒருவேளை அதிகமாகக் காலை நேரத்தில் சாப்பிட்டால் நாள் முழுவதும் வயிறு கனமாக இருப்பது போல் தோன்றும். அதேபோல் உடல் எடை கூடும் வாய்ப்பும் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றது.
காலை நேரத்தில் எதையும் சாப்பிடாமல் தவிர்த்து விட்டால் உடல் பலவீனம் மற்றும் அமிலத்தன்மை சிக்கல்கள் உருவாகக் கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். காலை நேரத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறித்து இங்குக் காணலாம்.

உப்புமா

BEST HEALTHY BREAKFAST IN TAMIL: ரவையில் தயாரிக்கப்படும் உப்புமாவைக் காலை நேரத்தில் சாப்பிடலாம். இந்த உணவில் கால்சியம் உள்ளது. புரோட்டின் நிறைந்த உளுத்தம் பருப்பு இது சுவைக்காகச் சேர்க்கப்படுகிறது.
மேலும் காய்கறிகள், பாசிப்பருப்பு, கருவேப்பிலை உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொண்டால் வயிறு கனமாக இருக்கக்கூடிய உணர்வு ஏற்படாது.

இட்லி

BEST HEALTHY BREAKFAST IN TAMIL: வளர்வது வீட்டில் காலையில் உணவாக எடுத்துக் கொள்வது இட்லி தான். சாப்பிடுவதற்குச் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் எடை அதிகரிப்பைக் குறைக்கிறது.
தேங்காய் சட்னி அல்லது சாம்பார் உடன் இதைச் சாப்பிடலாம். அரிசி மாவு, உளுத்தம் பருப்பு உள்ளிட்டவைகளால் சமைப்பதால் உடலுக்கு மிகுந்த சத்து கிடைக்கும்.

போஹா

BEST HEALTHY BREAKFAST IN TAMIL: ஆரோக்கியமாக இருக்கக் காலை நேரத்தில் போஹா உணவை எடுத்துக் கொள்ளலாம். சுவையாக இருப்பது மட்டுமின்றி செரிமானத்திற்குச் சிறந்த உணவாக இது கூறப்படுகிறது. இதனுடன் சுவைக்காக வேர்க்கடலை, காய்கறிகள், எலுமிச்சைச்சாறு உள்ளிட்டவற்றைச் சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.

ஊத்தாப்பம்

BEST HEALTHY BREAKFAST IN TAMIL: உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியைச் சேர்த்து அரைத்துத் தயாரிக்கப்படுவதால் இதில் சத்தான பண்புகள் அதிகம் நிறைந்திருக்கிறது. இது உடலில் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வாயு மற்றும் அமிலத்தன்மை சிக்கல்கள் ஏற்படாது. அதேபோல் இதைத் தயாரிக்க அதிக நேரம் தேவையில்லை.
read more  semparuthi poo benefits in tamil| செம்பருத்தி பூ நன்மைகள்
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments