இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அவ்னி சினிமாஸ் தயாரிப்பில் வடிவேலு நடித்து வரும் கேங்கர்ஸ் திரைப்படம் வருகிற ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தில் கேத்தரின் தெரசா, வாணி போஜன், தீபா ஷங்கர், ரெடின் கிங்ஸ்லி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி மற்றும் வடிவேலுவுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை பற்றி பேட்டி ஒன்றில் பத்திரிகையாளர் அந்தணன் விளக்கியுள்ளார்.
சமீபத்தில் அந்தணன் அளித்த பேட்டியில் வடிவேலு நடிப்பில் வெளியான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படம் அவரது கம்பேக் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கேங்கர்ஸ் படத்தில் சுந்தர்.சி இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக வடிவேலுவுக்கு காமெடியில் கம்பேக்காக இருக்கும்.
சுந்தர். சியும் வடிவேலுவும் இணைந்து பல படங்கள் நடித்திருந்தாலும் வடிவேலு இல்லாத சமயத்திலும் சுந்தர்.சி தன் படத்தில் முடிந்த அளவிற்கு நகைச்சுவையை தந்துக்கொண்டு தான் இருந்தார் அதனால் மீண்டும் அவர்கள் இணையப் போகும் இந்த படம் அல்டிமேட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது வடிவேலு பேசும் போது சுந்தர்.சிக்கும் தனக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை எல்லாம் சுற்றி இருப்பவர்கள் சேர்ந்து செய்த சதி என்பது போல் பேசி உள்ளார். ஆனால் வடிவேலு செய்த செயலால் தான் சுந்தர்.சி சந்தானத்திடம் போனதாக கூறப்படுகிறது. அவர் இந்த படத்தை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டால் இன்னும் 10 வருடத்திற்கு அவரை மிஞ்ச ஆளே இல்லை.
நகைச்சுவை நடிகரான விவேக்கும் இல்லை சந்தானமும் ஹீரோவாக நடிக்க கிளம்பிட்டார் இந்த நிலையில் வடிவேலு மீண்டும் காமெடியானாக நடிக்க ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விஷயம், அவரை போல காமெடி செய்ய இந்த உலகத்திலேயே ஆள் இல்லை அதனால் அரசாங்கம் அவரை மரியாதைப்படுத்தும் விதமாக பத்ம பூஷன் போன்ற விருதை அவருக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தணன் ஐஸ் வைத்துள்ளார்.
சுந்தர்.சி மற்றும் வடிவேலுவுக்கும் இடையே 20 வருடங்களாக இருந்த கருத்து வேறுபாடு சில நொடிகளில் கலைந்து போனதற்கு காரணம் சினிமாவில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்கிற அதே அரசியல் பாணி அட்ஜெஸ்ட்மென்ட் தான். மேலும், ஒரு நாளைக்கே 10 லட்சம் வரை சம்பளம் வாங்கிய முதல் நடிகர் வடிவேலு தான். இப்பவும் அவரது சம்பளம் அதிகம் என்றும் அந்தணன் பேசியுள்ளார்.
காமெடியானாக இருந்து ஹீரோவாக நடிக்க சென்ற நடிகர் சந்தானம் மீண்டும் பாஸ் என்கிற பாஸ்கரன் 2, எஸ்.டி.ஆர் 48 உள்ளிட்ட படங்களில் காமெடியனாக கமிட்டாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யார் கேட்டும் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொள்ளாத சந்தானம் சிம்பு கேட்டவுடன் ஒப்புக்கொண்டது சினிமாவில் இன்னமும் அவரை போல் நன்றி மறவாமல் இருப்பவர்கள் சிலர் இருக்கின்றனர் என்பதை காட்டுகிறது. வடிவேலுவும் சந்தானமும் ரசிகர்களை மீண்டும் சிரிக்க வைக்க அடுத்தடுத்து படங்களை வெளியிட உள்ள நிலையில், மீண்டும் தியேட்டர்களில் சிரிப்பு சத்தத்தை கேட்கலாம் என்றார்.