Mandaadi: நடிகர் சூரி நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நேற்று அந்தப் படத்தின் டைட்டில் வெளியானது. தற்போது சூரி மாமன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கி வருகிறார். லார்க் ஸ்டூடியோ இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மாமன் திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது .குறிப்பாக சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .மேலும் இந்த படத்தில் லப்பர் பந்து புகழ் பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் என பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படம் அடுத்த மாதம் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சூரியின் அடுத்த படத்தின் டைட்டில் லுக் வெளியானது. இந்தப் படத்திற்கு மண்டாடி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்க இருக்கிறார். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க போகிறார். ஏற்கனவே சூரி நடித்த விடுதலை படத்தை தயாரித்தது எல்ரெட் குமார்தான்.

இந்த நிலையில் மண்டாடி படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகையை பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் மகிமா நம்பியார் நடிக்கப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது .அதுமட்டுமல்ல சத்யராஜ் ,சஞ்சனா என பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜ், சூரி ஆகிய இருவரின் அந்த லொள்ளு காட்சிகள் இன்று வரை அனைவரையும் சிரிக்க வைக்கிறது.
ஆனால் இந்தப் படத்தில் எப்படிப்பட்ட காட்சிகளாக வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் இந்தப் படத்தில் சுஹாஷ்,ரவீந்திர விஜய் மற்றும் அச்யூத் குமார் என பலர் நடிக்க உள்ளனர்.