Vijay Tv: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டிற்கான வார புரோமோ வெளியாகி இருக்கிறது.
ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் பேசாமல் இருக்கின்றனர். இவர்களை பேச விடாமல் இடையில் விஜயா நந்தி மாதிரி இருந்து கவனித்து கொண்டே இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் வார புரோமோவில் மனோஜுக்கு ஜூரம் வந்து விடுகிறது.
உடனே ரோகிணி இடையில் எழுந்து பார்க்கிறார். மனோஜுக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைக்கிறார். தலையில் துணியை விரித்து விடுகிறார். பின்னர் அவருக்காக சமைத்து கொண்டு இருக்க விஜயா வந்து என்ன செஞ்சிட்டு இருக்க எனக் கேட்க அவருக்கு ஜூரம் என்கிறார்.
அப்போ விஜயா போய் மகனை நலம் விசாரிக்க என்ன ஆச்சு ஏன் உனக்கு திடீரென ஜூரம் வந்துச்சு எனக் கேட்க ஒருவேளை ரோகிணியோட பேசாதது தான் உடம்பு சரியில்லையா எனக் கூற விஜயா கடுப்பாகிறார். இதை ரோகிணியும் கேட்டு விடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் அரசியின் கல்யாண பிரச்னை ஒரு பக்கம் இருக்க கோமதி தன்னுடைய மருமகள்களுடன் அம்பாசமுத்திரத்திற்கு சாமி கும்பிட செல்கிறார். அங்கு அவர்கள் சாமி கும்பிட்டு வெளியில் வர ஒரு நடனப்போட்டிக்கான போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.
அதில் முதல் பரிசு கார் என்றும், இரண்டாம் பரிசு பைக் எனக் குறிப்பிட்டு இருக்க ராஜி அந்த போட்டியில் கலந்துக்கொண்டு கதிருக்கு பரிசை வாங்கி கொடுத்து விடலாம் என முடிவு செய்கிறார். இதை மீனா மற்றும் மயிலிடம் சொல்கிறார். கோமதியிடம் சொல்ல அவர் உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எனக் கடுப்படிக்கிறார்.