பாகுபலி மீண்டும் வசூலில் ராஜா! ‘Baahubali: The Epic’ ரீ-ரிலீஸ் சாகசம் திரையரங்குகளை கலக்கிறது!
இயக்குநர் S. S. ராஜமௌலி இயக்கிய 2015 ஆம் ஆண்டின் ‘பாகுபலி: தி பிகினிங்’ மற்றும் 2017 ஆம் ஆண்டின் ‘பாகுபலி 2: தி கன்க்ளூஷன்’ — இந்த இரண்டு பிரமாண்டமான பாகங்களையும் ஒன்றாக இணைத்து, புதிய வடிவில் ‘Baahubali: The Epic’ என பெயரிட்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியிட்டிருக்காங்க.
இந்த ரீ-ரிலீஸ் இந்திய ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பைப் பெற்றது. முதல் நாளே படம் ரூ. 9.25 கோடி வசூலைப் பதிவு செய்ததோடு, சில விபரங்களில் ரூ. 10.4 கோடி வரை சென்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிஷ்மதி இராச்யம் மீண்டும் திரையில் உயிர்பெற்றது போல ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு திரண்டனர். பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் பலகை மீண்டும் பறக்க வைத்திருக்காங்க!

வெளியான நான்கு நாட்களுக்குள், இந்தியா மற்றும் வெளிநாடுகள் சேர்த்து மொத்தம் ரூ. 41.95 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், “பழைய படங்களும் சரியான முறையில் ரீ-ரிலீஸ் பண்ணினா புது மைல்கல் உருவாக்கலாம்” என்பதற்கு பாகுபலி தி எபிக் செம்ம சான்று!
தொடர்ந்து சில நாட்களில் வசூல் சற்று குறைந்தாலும், இதுவரை எந்த ரீ-ரிலீஸ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு டிக்கெட் டிமாண்ட் வந்திருப்பது ரசிகர்களின் அன்பை தெளிவாக காட்டுகிறது.