பொங்கல் ரேஸில் குதித்த பெரிய தலைகளின் படங்கள் – விஜய்யுடன் நேரடி கிளாஷ் கொடுக்கிறார் பிரபாஸ்! | The Raja Saab | Jananayagan | Pongal Release 2026

பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் போர் ஆரம்பம்!


இந்திய அளவில் பிரபலமான ஹீரோ பிரபாஸ் நடிக்கும் “தி ராஜா சாப்” படத்துக்கு புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜனவரி 6, 2026 என இருந்த ரிலீஸ் தேதி — இப்போது ஜனவரி 9, 2026 என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

படம் பற்றி:
மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஒரு ஹாரர் காமெடி கலந்த எமோஷனல் எண்டர்டெயினர்.
இசை: தமன்,
நடிப்பு: பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால்,
சிறப்பு தோற்றம்: சஞ்சய் தத்

விஜய்யின் “ஜனநாயகன்” vs பிரபாஸின் “தி ராஜா சாப்” 
விஜய் அரசியலுக்கு குதித்த பிறகு நடிக்கும் கடைசி படம் தான் “ஜனநாயகன்” (இயக்கம்: எச்.வினோத்).
இந்த படம் கூட ஜனவரி 9, 2026 லே ரிலீஸ் ஆகப்போகிறது — அதாவது நேரடி கிளாஷ்!

பொங்கல் ரேஸில் மற்ற பெரிய பெயர்கள்:

  • சிவகார்த்திகேயன்“பராசக்தி” (இயக்கம்: சுதா கொங்கரா) – ஜனவரி 14

  • சூர்யாஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் – ஜனவரி மாதத்திலேயே ரிலீஸ் என எதிர்பார்ப்பு

 பொங்கல் 2026 – பெரிய தலைகளின் மோதல்!
இந்த பொங்கலுக்கே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மாஸ் விருந்து ரெடி!
விஜய்  பிரபாஸ்  சூர்யா  சிவகார்த்திகேயன்  — நாலு பேரும் பாக்ஸ் ஆபிஸ் மேடையில் மோதப் போறாங்க!

Leave a Comment