தெலுங்கு சினிமாவில் “Dhamaka”, “Bhagavanth Kesari”, “Guntur Kaaram” போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த ஸ்ரீலீலா (Sreeleela), இப்போது டபுள் பிளாஸ்ட் கொடுக்க ரெடி!
தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமாகும் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “பராசக்தி” இது அவரின் டெப்யூ தமிழ் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதோடே, ஹிந்தி சினிமாவிலும் “ஆஷிக் 3 (Aashiqui 3)” மூலம் கிராண்டா எண்ட்ரி கொடுக்கப் போகிறார் . அந்தப் படத்தில் கார்த்திக் ஆரியன் உடன் நடிக்கிறார், மேலும் இதை இயக்குவது அனுராக் பாசு.

ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி என இரு பெரிய திரையுலகங்களிலும் அறிமுகமாகும் இந்த டாலண்டட் பெண்ணை ரசிகர்கள் “சவுத் இந்தியாவின் அடுத்த பான்-இந்தியா குயின்! ” என்று already celebrate பண்ணிட்டு இருக்காங்க.
ஸ்ரீலீலா டபுள் எண்ட்ரி – தமிழ்-ஹிந்தி இரண்டிலும் புயல் கிளப்பப் போறாங்கன்னு சொல்லலாம்!