மலையாள அழகி அனுபமா பரமேஸ்வரன் மீது சமீபத்தில் மோர்பிங் புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
சைபர் குற்றப்பிரிவு விசாரணையில், இந்த செயலை தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் செய்தது என தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் வயதை கருத்தில் கொண்டு அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், சட்டரீதியான நடவடிக்கை தொடரும் என அனுபமா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்மெண்ட் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அனுபமா கூறியதாவது:
“சில நாட்களுக்கு முன் என் பெயரில் மோர்பிங் புகைப்படங்கள், தவறான தகவல்கள் பகிரப்பட்டன. அதே நபர் பல போலி அக்கௌண்ட்கள் உருவாக்கி என்னை அவமதிக்கும் வகையில் பதிவுகள் செய்தார். இதையடுத்து நான் கேரளா சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தேன். விசாரணையில் இதற்குப் பின்னால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு 20 வயது பெண் இருப்பது தெரியவந்தது. அவளது வயதை மதித்து பெயர் வெளியிடவில்லை. ஆனால் சட்டரீதியான நடவடிக்கைகள் நடைபெறும்.”
மேலும் அனுபமா கூறியதாவது
“சினிமா நட்சத்திரங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஒரே உரிமைகள் உண்டு. ஆன்லைன் புல்லியிங் என்பது சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.”
இந்த உரையால் நெட்டிசன்களும் ரசிகர்களும் அனுபமாவை பாராட்டி வருகிறார்கள். “அவள் வயதை மதித்து பெயர் வெளியிடாதது பெரிய மனிதத்துவம்,” என பலர் கூறியுள்ளனர்.
அனுபமா பரமேஸ்வரன் – ‘பிரேமம்’ மூலம் அறிமுகமாகி ‘ஆ ஆ’, ‘சதமாணம் பவதி’, ‘ஹலோ குரு பிரேமகோசமே’, ‘ராக்ஷசுது’, ‘கார்த்திகேயா 2’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்.
இப்போது, சமூக வலைதளங்களில் நடக்கும் போலி அக்கௌண்ட் – மோர்பிங் புகைப்படங்கள் – சைபர் புல்லியிங் போன்ற சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள அனுபமா, இளம் தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். #AnupamaParameswaran , #TamilCinemaNews
