Mandaadi:சூரியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரும் வரவேற்பை பெற்ற சூரி அடுத்ததாக கருடன், கொட்டுக்காளி போன்ற திரைப்படங்களிலும் நடிக்க அந்தப் படமும் பெரிய அளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார் சூரி.
அதிலிருந்து தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் தற்போது சூரி நடித்த வருகிறார். அந்த படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று மற்றொரு புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
செல்ஃபி பட இயக்குனரும் வெற்றிமாறனின் இணை இயக்குனருமான மதிமாறன் இயக்க அந்த படத்திற்கு மண்டாடி என பெயரிடப்பட்டுள்ளது. கடலுக்குள் நடக்கும் ஒரு வீர விளையாட்டை மையப்படுத்தி இந்த படத்தை எடுக்க இருக்கிறார்கள். விடுதலை படத்தை எடுத்த எல்ரெட் குமார்தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இதில் சூரி, மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.
நேற்று இதன் போஸ்டரை வெளியிட்டு பேசிய சூரி ஏராளமான விஷயங்களை பகிர்ந்தார். வெற்றிமாறன் மட்டும் இல்லை என்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. விடுதலை படத்திற்கு முன் எனக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. அது சுசீந்திரன் மூலமாகத்தான் நடந்தது. அதன் பிறகு என்னை ஒரு ஹீரோவாக நடிக்க வைத்து இப்போது இவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் வெற்றி மாறன் தான் என கூறினார்.

எதுவுமே இல்லாமல் தான் வந்தேன் .ஆனால் இப்போது என் தகுதிக்கு மீறி சம்பாதித்து விட்டேன் .இது போதும். இனிமேல் சினிமாக்களில் நல்ல நல்ல படங்களில் நடித்து இப்படியே இருந்தால் போதும் என்று கூறினார். மேலும் இந்த படத்தில் முதலில் நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லை. அதன் பிறகு தான் மகிமா நம்பியாரிடம் இயக்குனர் கதையை சொல்லி அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் மகிமா நம்பியார் .
மகிமா நம்பியார் கூறும் பொழுது இது எனக்கு ஒரு சேலஞ்ச். நல்ல கதை. அதனால் நான் ஒத்துக் கொண்டேன் என்று கூறினார். இதைப்பற்றி சூரி கூறும் பொழுது அவர் சேலஞ்ச் என்று சொன்னார். உங்களுக்கு மட்டுமில்லை இந்த படத்தில் எந்த நடிகை வந்தாலும் அது சூரியுடன் நடிக்கும் போது அவர்களுக்கு அது சேலஞ்ச் ஆகத்தான் இருக்கும் என்று தமாஷாக கூறினார் சூரி.