Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
காலையில் முத்து வர அண்ணாமலை அவரை அருகில் அழைத்து இனி நைட் சவாரிக்கு போகாதே என அட்வைஸ் கொடுக்கிறார். பின்னர் மீனா சீதாவிடம் இருந்து வாங்கிய பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறார். போகும் போது அண்ணாமலையிடம் ஆர்டருக்கு கட்டிவிட்டு வருவதாக சொல்கிறார்.
இதை ஒட்டி கேட்கும் விஜயா உடனே சிந்தாமணிக்கு கால் செய்து மீனா பணத்தை ஏற்பாடு செய்து விட்டதாகவும், அதைக் கட்ட மண்டபத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறி விடுகிறார். இதை கேட்கும் சிந்தாமணி நீங்க அவளை தடுக்கலையா என கேட்க என்னால் முடியாது என விஜயா கூறி விடுகிறார்.
பின்னர் சிந்தாமணி தன்னுடைய ஆட்களிடம் மண்டபத்தை சுற்றி நில்லுங்கள் அவர் வந்தா பணத்தை அடித்து விடுங்கள் என சொல்லிவிட்டு செல்கிறார். மீனா ஆட்டோவில் சென்று கொண்டிருக்க நடுவழியில் அது ரிப்பேர் ஆகிவிடுகிறது. கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது தான் நடந்து செல்கிறேன் என மீனா இறங்கி நடந்து சென்று கொண்டிருக்கிறார்.

அப்பொழுது சிந்தாமணி ஆட்கள் மீனாவை வளைத்து கையில் இருந்த பணத்தை திருடி விடுகின்றனர். அவர் எவ்வளவு போராடியும் அவர் கீழே தள்ளிவிட்டு பணத்தை எடுத்து சென்று விடுகின்றனர். ரோட்டிலே மீனா அழுது கொண்டிருக்க அவருடன் வேலை செய்யும் பெண்கள் வந்து அவரை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சிந்தாமணி ஆட்கள் மீனாவிடம் இருந்து பணத்தை திருடியதை அவருக்கு கால் செய்து சொல்லிவிடுகின்றனர். ஹாஸ்பிடலில் மீனா இருக்க ஓடி வருகிறார் முத்து. உனக்கு அடிபட்டதாக தெரிந்தவுடன் காரை எடுத்தது மட்டுமே எனக்கு ஞாபகம் இருக்கு உயிரே இல்லை என கூறிக் கொண்டிருக்கிறார்.
சீதாவிடம் இருந்து பணம் வாங்கினேன். அவர் தன்னுடைய நண்பரிடம் இருந்து இன்னும் கொஞ்சம் ஆசை வாங்கி டெபாசிட் என எனக்கு கொடுத்திருந்தா இப்போ எல்லாத்தையும் தொலைச்சிட்டு இருக்கிறேன் என அழுதுக்கொண்டு இருக்கிறார். பணம் தானே சம்பாரிச்சிக்கலாம் என அறிவுரை சொல்கிறார் முத்து.
மீனாவை முத்து வீட்டிற்கு அழைத்து வர குடும்பத்தினர் என்னாச்சு என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பதட்டத்தில் முத்து இருக்க மனோஜ் லூசுத்தனமாக கேள்வி கேட்டு அவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.