‘திரிஷ்யம் 3’ ஹிந்தி ரீமேக் ரத்து – ஜீத்து ஜோசப்பின் கண்டனம் காரணமா?
drishyam 3 makers in hindi stop :மோகன்லால்ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம்’ படம், 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. இது ஒரு அசாதாரண குடும்ப த்ரில்லராக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ‘பாப்பநாசம்’, ஹிந்தியில் ‘Drishyam’ என வெளியானன.
‘திரிஷ்யம் 2’ தொடர்ச்சி வெற்றியும்,|drishyam 3 makers in hindi stop
2021-ஆம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ மலையாளத்தில் வெளியானதும் பெரிய வரவேற்பை பெற்றது. அதையும் தொடர்ந்து ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்த ரீமேக் வெளியானது. இது கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியது.
‘திரிஷ்யம் 3’ – குழப்பமான சூழ்நிலை
இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ ஹிந்தி பதிப்பை அஜய் தேவ்கன் மற்றும் அவரது குழு, மலையாள பதிப்பு வெளியாகும் முன்பே உருவாக்கத் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. இது ஜீத்து ஜோசப்பின் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
ஜீத்து ஜோசப் இதுபற்றி:
“திரிஷ்யம் என்பது மலையாளத்தில் உருவாகி பரிணாமம் அடைந்த ஒரு கதை. அதன் முடிவு எங்கு நிகழ வேண்டும் என்பது என் விருப்பத்தின் படி இருக்க வேண்டும். ஹிந்தி படக்குழு முன்னேறினால், சட்ட நடவடிக்கைகள் எடுப்பேன்” எனத் தெளிவாக எச்சரித்தார்.
drishyam 3 makers in hindi stop
ஹிந்தி படக்குழு தற்காலிகமாக திட்டத்தை நிறுத்தியது
ஜீத்து ஜோசப்பின் கண்டனம் மற்றும் சட்ட எச்சரிக்கையின் பின்னணியில், ஹிந்தி திரிஷ்யம் 3 திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. மலையாள பதிப்பு உருவாகும் வரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.