“Jana Nayagan: சென்சாரில் சிக்கிய ஜன நாயகன் — 64 இடங்களில் கட்!”

kvetrivel270

December 28, 2025

H.வினோத் இயக்கத்தில் நமது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை K.V.N நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்து , பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருள்செலவில் உருவாகியுள்ள இப்படம்  இசை வெளியீட்டுவிழாவில்  நேற்று மலேசியாவே திகைத்து  போகும் அளவிற்கு நடைபெற்றது.

இந்நிலையில், பிரபல யூடியூபரும், திரைப்பட விமர்சகருமான கோடாங்கி Kodanki voice சேனலில் ஜனநாயகன் படம் பற்றி  பேசி உள்ளார். அதில், ஜனநாயகன் திரைப்படத்தில்  அதிகமாக வன்முறை காட்சிகள் உள்ளத்தால்  , சென்சார்  குழு கிட்டத்தட்ட 64 காட்சிகளில் நீக்க வேண்டும்  அதுமட்டுமில்லாமல் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இத்தனை காட்சிகளை தூக்கினால் படத்தை பார்க்கும் ஆடியன்சுக்கு படம் சுத்தமாக புரியாது, விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இந்த படத்தை வெற்றிப்படமாக ஆக்க வேண்டும், அந்த படத்தின் மூலம் பணத்தை அள்ள வேண்டும் என நினைத்து இருக்கும் K.V.N தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைத்துள்ளது. இதனால் சென்சார்க்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படியே 64 காட்சிகளின் நீக்காவிட்டால்  படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் தான் தரப்படும் என படக்குழுவிடம்  திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

Leave a Comment