விஜய்யின் “ஜனநாயகன்” படக்குழுவின் சர்ப்ரைஸ் அறிவிப்பு! முதல் பாடல் ரிலீஸ் தேதியுடன் ரசிகர்களுக்கு ட்ரீட்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இறுதி படமான “ஜனநாயகன்” (Thalapathy 69) குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படக்குழு தற்போது மிகப்பெரிய சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

கே.வி.என். புரொடக்சன்ஸ் (KVN Productions) தனது அதிகாரப்பூர்வ X (Twitter) பக்கத்தின் மூலம், “ஜனநாயகன்” திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மறுதினம் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டம் நிலவுகிறது.

அதுமட்டுமல்லாது, பாடலின் ப்ரோமோ வீடியோ நாளை வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையில் வெளிவரவுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தபடி, “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தளபதியின் கடைசி படம் என்பதால், ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கே ஒரு திருவிழாவாக மாறியுள்ளது!

Leave a Comment