கமல் ஹாசனின் ₹100 கோடி கனவுப்படம் ‘மருதநாயகம்’ ஏன் இன்னும் வெளிவரல? இதோ அந்த shocking காரணம்!
#TamilCinemaNews #KamalHaasan #Marudhanayagam #KollywoodUpdates
தமிழ் சினிமா ரசிகர்களுக்கே ஒரு லெஜண்ட் – உலக நாயகன் கமல் ஹாசன்! நடிப்பு, டைரக்ஷன், டெக்னாலஜி, புதுமை – எதுலயும் இவர் கைய வச்சா போதும், அது ஹிஸ்டரி தான். ஆனா இவரோட ஒரு மாபெரும் கனவுப்படம் மட்டும் இன்னைக்கும் துவங்கிய இடத்துலயே நின்றுட்டு இருக்கு – அதுதான் மருதநாயகம்!
இந்தப் படம் பற்றி சொல்லணா… அது ஒரு சினிமா இல்லை, ஒரு கலாச்சார லெஜண்ட் தான். கமல் ஹாசன் தானே எழுதிப், இயக்கி, தயாரிக்க நினைத்த இந்த படம் அப்போதே இந்திய சினிமாவின் costliest projectன்னு சொல்லப்பட்டது. Launch function நடந்தது நேரா MGR Film Cityல — அத்தனை பிரமாண்டமா இருந்தது. அதுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் II கூட வந்திருந்தாங்க!

அந்த விழாவில் கலைஞர் கருணாநிதியும், சிவாஜி கணேசனும் இருந்தது — அந்த அளவுக்கு ஒரு ஹை-பை மொமெண்ட்! Launch போன நேரத்திலேயே படத்துக்கான budget ஏறத்தாழ ₹20 கோடினு சொல்லப்பட்டது — அந்த காலத்துல அதுவே புது சாதனை. கமல் ஹாசன் அப்போ SCREEN magazine-க்கு கொடுத்த பேட்டியில சொன்னார், “இந்த கதை உண்மையை அடிப்படையா கொண்டது, கற்பனை இல்லை. இதை மூன்று பாகமா கூட எடுக்கலாம்”ன்னு.
மருதநாயகம் கதை ஒரு உண்மையான வீரனின் வாழ்க்கையில இருந்து – அவர் “ஒரு இந்துவாகப் பிறந்து, முஸ்லீமாக மாறி, கிறிஸ்துவ பெண்ணை மணந்தவர்”. கமல் சொன்ன மாதிரி, “அந்த மனிதனின் வாழ்க்கை 275 ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்தாலும், அவனோட மனசு இன்னைக்கும் நம்மள பாதிக்குது.”
அந்தப் படம் துவங்கணும், test shoot பண்ணணும் என்றாலே ₹1 கோடி செலவு பண்ணிட்டாங்க! அதுக்குப்பிறகு சில காரணங்களால project நின்று போச்சு. சிலர் சொல்வது – politics, சிலர் சொல்வது – fund shortage. ஆனா fansக்கு இன்னைக்கும் ஒரு ஆசை: “ஒருநாள் கமல் அந்த மருதநாயகத்தை திரையில் காட்டுவார்!
