கயாடு லோஹர்: “டிராகன் படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது!”|kayaadu-lohar-dragon-movie-life-changing
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் பல்லவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து, இளசுகளை கவர்ந்தவர் கயாடு லோஹர். கிளாமரான வேடமாக இருந்தாலும், அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
தற்போது சென்சேஷனாக மாறியுள்ள கயாடு, இந்தப் படம் தனக்கென்று ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்ததாக கூறுகிறார்.
*”ஆரம்பத்தில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஜூம் காலில் கதையை சொல்லும்போது, ‘கீர்த்தி’ கதாபாத்திரத்துக்காக என்னை நினைத்தார். அதில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், அதற்குப் பிறகு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. படம் என் கைகளை விட்டு போய்விட்டது என நினைத்தேன்.
ஒரு மாதம் கழித்து, அவர் மீண்டும் அணுகி ‘பல்லவி’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். இது இரண்டு ஹீரோயின் கதை என யோசிக்க வேண்டாம், மக்களுக்கு உன்னை பிடிக்கும்படி காட்சிகளை அமைப்பேன் என்று உறுதியளித்தார். அவருடைய வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையால், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அஸ்வத் மாரிமுத்துவிற்கு என் மனமார்ந்த நன்றி. அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றி, எனக்கு சிறந்த அறிமுகத்தை வழங்கினார்.
பிரதீப் ரங்கநாதன் போல உண்மையான நண்பரை வாழ்க்கையில் காண முடியாது. உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!”* – என கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.