Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மீனாவின் அப்பாவிடம் வந்து செந்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். பிரைவேட் வேலை ஓகே தான் மாப்பிள்ளை. ஆனா அரசு வேலைதான் நமக்கு நிரந்தரம். இப்போ கூட ஒரு வேலை வந்து இருக்கு பணம் கொடுத்தா கிடச்சிரும் என்கிறார்.
அந்த நேரத்தில் பாண்டியன் கால் செய்து பேங்க் இன்னுமா போற எனக் கேட்க இந்தோ கிளம்பிடுறேன் அப்பா எனக் கூற செந்தில் வேலை வந்துவிட்டதாக சொல்லி கிளம்பி செல்கிறார். அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அரசியை பார்க்க சதீஷ் நேரில் வந்து விடுகிறார்.
வீட்டில் யாரும் இல்லாமல் போக அப்போ மீனா வருகிறார். அரசியை பார்க்க வந்ததாக கூற அவரும் சிரித்து கொண்டு உள்ளே இருப்பதாக அவரை அனுப்பி வைக்கிறார். அரசி மற்றும் சதீஷ் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பொறுக்க முடியாத அரசி குமரவேலுவுடனான தன் காதலை உடைக்கிறார்.
பல வருட பகை இருந்தது. அவர் என்னை காதலிப்பதாக சொன்னாங்க. நானும் யோசிக்காம ஓகே சொன்னேன். அப்புறம் வீட்டிற்கு விஷயம் தெரிந்து அப்பா மகளோட வாழ்க்கை சரியா இருக்கணும் சொல்லி உடனே இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாக சொல்கிறார். இதை கேட்கும் சதீஷ் அதிர்ச்சி அடைகிறார்.
என்னால் இதை சொல்லாம இருக்க முடியலை. மனசை போட்டு அரிச்சிட்டு இருக்க விஷயத்தை உங்களிடம் சொல்லிவிட்டேன். இனிமே உங்க முடிவு என்கிறார். சதீஷ் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார். மீனாவிடமும் சொல்லிவிட்டு செல்கிறார்.
உள்ளே வரும் மீனா சதீஷின் முகமே சரியில்லை. நீ அவரிடம் என்ன பேசுன எனக் கேட்க அரசி நடந்ததை சொல்கிறார். ஏன் இப்படி செஞ்ச எனக் கேட்டு இனி என்ன நடக்குமோ என கவலையாக அமர்கிறார். பேங்க் சென்று பணம் எடுக்கிறார் செந்தில்.
வரும் வழியில் மாமனார் அங்கையே இருக்க கையில் இருக்கும் பணத்தை கொடுக்க முடிவெடுத்து அவரிடம் போய் அமர்ந்து உட்காருகிறார். காசு கொடுத்தா கிடச்சிரும் தானே எனக் கேட்க அவரும் அதெல்லாம் கிடச்சிரும் என்கிறார்.