முதன்முறையாக நிச்சய மோதிரம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா! விஜய் தேவரகொண்டா சம்பந்தமா?

தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் வரை செல்வாக்கு செலுத்தும் அழகி ராஷ்மிகா மந்தனா, குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்து “நேஷனல் கிரஷ்” என அழைக்கப்படுகிறார். 

இவர் குறித்து பேசும் போது, ரசிகர்களின் நினைவில் வருவது ஒன்றே ஒன்று — விஜய் தேவரகொண்டாவுடனான காதல்.  இருவரும் இதுவரை தங்கள் உறவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் அவர்களை இணைத்து பல வதந்திகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

rashmika-mandanna-engagement-ring-vijay-deverakonda
rashmika-mandanna-engagement-ring-vijay-deverakonda

அதற்கு ராஷ்மிகா வெட்கத்துடன் புன்னகைத்து,
 “அது எனக்கு மிகவும் முக்கியமான மோதிரம்…” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “அந்த மோதிரம் விஜய் தேவரகொண்டா கொடுத்த நிச்சயதார்த்த மோதிரம் தான்!” என கமெண்ட் செய்து வருகின்றனர். 

ராஷ்மிகா இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்காத நிலையிலும், இந்த ஒரு பதில் ரசிகர்களிடையே புதிய சர்ச்சையையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

Leave a Comment