எட் ஷீரன், ஹனுமேன் கைண்ட், தி – சாந்தோஷ் நாராயணனின் சர்வதேச கொலாபரேஷன்!
தமிழ் திரையுலகின் மாஸ்மியூசிக் டைரக்டராக பெயர் பெற்ற சாந்தோஷ் நாராயணன், இப்போது சர்வதேச அளவிலான ஒரு மிகப்பெரிய மியூசிக் கொலாபரேஷனை அறிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் (Ed Sheeran), இந்திய ராப்பர் ஹனுமேன் கைண்ட் (Hanumankind) மற்றும் தனது மகள் தி (Dhee) ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய பாடலை உருவாக்கியுள்ளார்.
இது சாந்தோஷ் நாராயணனின் முதல் இன்டர்நேஷனல் மியூசிக் கொலாபரேஷன் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு முன்பு அவர் ‘நீயே ஒளி’, ‘என்ஜாய் என்ஜாமி’ போன்ற இன்டிபெண்ட் பாடல்களால் உலகளவில் புகழ்பெற்றார்.
தி – தந்தை மகள் காம்போ வெற்றி தொடர்கிறது!
சாந்தோஷ் நாராயணனின் மகளான தி, ‘Enjoy Enjaami’, ‘Maamadura’, ‘Chamkeela Angeelesi’, ‘Ey Sandakara’ போன்ற பல பாடல்களில் குரல் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘தக் லைஃப்’ படத்திற்காக ‘முத்த மழை’ பாடலையும் பாடியிருந்தார்.
எட் ஷீரனின் இந்திய கனெக்ஷன்!
எட் ஷீரன் கடந்த மாதம் சென்னை நகரில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து ஸ்டேஜ் பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். அப்போது அவர்கள் ‘Shape of You’ மற்றும் ‘Urvashi Urvashi’ பாடல்களை மெர்ச் செய்து பாடியதை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. மேலும் அவர் சமீபத்தில் அரிஜித் சிங் உடன் ‘Sapphire’ என்ற பாடலிலும் இணைந்திருந்தார். இப்போது சாந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து ஒரு “One Shot with Ed Sheeran” எனும் மியூசிக் எக்ஸ்பீரியன்ஸில் பங்கேற்கிறார். இதை Philip Barantini, Adolescence பட இயக்குநர், இயக்குகிறார்.
