2026 சட்டமன்ற தேர்தல் வரதோடே, தமிழ் அரசியலில் கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள் எல்லாம் full swing-ல போயிட்டு இருக்கு| seeman கடும் தாக்கு|
‘INDIA’ கூட்டணி – ‘NDA’ கூட்டணி என்று இரண்டு பெரிய அணிகளாக நாடே பிரிஞ்சுடுச்சு. தமிழ்நாட்டுல திமுக தலைமையில காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எல்லாரும் சேர்ந்து ஒரு பக்கம்; அதே நேரம் அதிமுக–பாஜக கூட்டணி இன்னொரு பக்கம்.

இதுக்கிடையில் பாமக, தவெக, அமமுக, தேமுதிக மாதிரி கட்சிகள் இன்னும் எந்த அணியோட சேர்றது என்ற முடிவுக்கு வரல. தேர்தல் நாள் நெருங்க நெருங்க கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமா போயிட்டு இருக்கு.
அந்த சூழ்நிலையில, நாம் தமிழர் கட்சி (NTK) ஒருங்கிணைப்பாளர் சீமான், மீடியாவிடம் கூட்டணியைப் பற்றி பேசுறபோது அதே பழைய தீயை புடிச்சுருக்காரு!
சொன்னது இதுதான்:
“விஜயகாந்த் அண்ணன் கூட்டணி வைத்ததால்தான் எதிர்க்கட்சியாக வந்தார் என்பது உண்மைதான். ஆனா, அவர் கிட்ட இருந்த 10.5% வாக்கு, கூட்டணி வைத்ததால்தான் சீர்குலைந்தது.
கூட்டணி வச்சு அண்ணன் விஜயகாந்த் என்ன ஆனார் என்று நாம பார்த்தோம். அதனால நாம தமிழர் கட்சி ஒருபோதும் யாருடனும் கூட்டணி வைக்காது!”
அதுவும் மட்டும் இல்ல, அவர் தொடர்ந்துருக்காரு –
“நாங்க மாற்றத்திற்கான அரசியலை செய்யணும். பழைய கட்சிகளோட கூட்டணி வச்சா, அந்த மாற்றம் எப்படி வரும்?
நாங்க எப்போதும் தனியா தான் தேர்தலை சந்திப்போம். இப்போ இது கசப்பா இருக்கும், ஆனா நாளைக்கு இது தான் நல்ல அரசியல் மாற்றத்துக்கான அடித்தளம் ஆகும்!”
சீமானின் இந்த கடும் கருத்து மீண்டும் அரசியல் வட்டாரத்தில பெரிய பேச்சாக்கி இருக்கு.
“தனித்துப் போட்டி – தன்னம்பிக்கை அரசியல்!” என்ற வாசகம் மீண்டும் NTK ரசிகர்களிடையே டிரெண்டாகுது
