விஜய் ரசிகர்கள் காத்திருந்த மாஸ் மியூசிக் அப்டேட் – ஜனநாயகன் முதல் சாங் ரிலீஸ்!
Tamil Cinema News: தளபதி விஜய் ரசிகர்கள் நீண்டநாள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது!
ஜனநாயகன் (Jananayagan) படத்தின் முதல் பாடல் இன்று மியூசிக் பிளாட்ஃபார்ம்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் வழங்கிய இந்த பாடல் முழுக்க முழுக்க மாஸ் பீட்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் எர்ஜியால் நிரம்பியுள்ளது. பாடலின் வரிகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி, ரசிகர்கள் “#JananayaganFirstSingle”, “#ThalapathyVijay”, “#Anirudh” என்ற ஹாஷ்டேக்களுடன் கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர்.
திரைப்பட குழுவின் தகவலின்படி, இந்த பாடல் விஜய்யின் அறிமுக காட்சிக்கு பொருத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் படம் முழுவதும் அரசியல், ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த மாஸ் எனர்ஜி கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில்,
“இது தான் உண்மையான தளபதி என்ட்ரி சாங்!”
“Anirudh-வின் பீட்ஸ் மிரட்டுது!”
என்று பாராட்டுகளை பொழிந்து வருகின்றனர்.
Jananayagan First Song தற்போது YouTube-இல் மில்லியன் கணக்கான பார்வைகளை எட்டியுள்ளதுடன், டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.