வடிவேலுவின் கேங்கர்ஸ் – காமெடியில் மிரட்டலான கம்பேக்!|vadivelu-gangers-movie
வைகை புயல் வடிவேலுவின் படங்களில் நகைச்சுவை என்பது தனி லெவலில் இருக்கும். குறிப்பாக, சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் சேரும்போது அந்த காமெடி இன்னும் அதிகமாக செட் ஆகும்.

அத்தகைய சூப்பர் ஹிட் கூட்டணியிலான ஒன்று சுந்தர் சி – வடிவேலு. வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் போன்ற பல படங்களில் இந்த கூட்டணி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்போது, இந்த வெற்றி கூட்டணியின் புதிய படம்தான் “கேங்கர்ஸ்”.
சுந்தர் சி இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் வடிவேலுவுடன் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். படம் ஏற்கனவே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் 24ஆம் தேதி வெளியீடு என தகவல் வெளிவந்த நிலையில், படத்தை முன்னதாக பார்த்தவர்கள், “கேங்கர்ஸ் சூப்பர் வந்திருக்கிறது!”, “வடிவேலு பல கெட்டப்புகளில் கலக்கியிருக்கிறார்!” எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
வடிவேலுவின் கம்பேக் காமெடி கலக்க போகுது, ரெடி ஆகிடுங்க