முதலில் பேபி, அடுத்து பேப் – வைரலாகும் அமலாபாலின் வீடியோ!|viral amala balin video
நடிகை அமலாபால், தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். அந்தப் படத்தின் வெற்றியால், விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
தமிழை தாண்டி, இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அமலாபால், தனது திரைப்பட கரியரில் முன்னணி நடிகையாக இருந்தபோதே இயக்குநர் A.L .விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், சில காரணங்களால் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு, ஜெகத் தேசாயுடன் காதலித்து திருமணமான அமலாபால், ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார்.
சமீபத்தில், தனது கணவர் வாங்கிக் கொடுத்த புதிய காரில் இருந்து இறங்கி, தனது குழந்தையை அன்பாகத் தூக்கிக்கொள்கிறார் அமலாபால். இந்த விடியோவை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்காக, “முதலில் பேபி, அடுத்து பேப்” என அவர் குறிப்பிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
RADE MORE:ஹோலி கொண்டாட்டத்தில் ஜோதிகா|holi-celebration-jothika
இப்போது , இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, வைரலாகி வருகிறது!