பிரதீப் ரங்கநாதன் புது அவதாரம் – தயாரிப்பாளராக அடியெடுத்து வைப்பு! PR SHOW-வுடன் புது பயணம்

vetri

July 6, 2026

Gen Z தலைமுறை இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இப்போ தயாரிப்பாளராகவும் மாறி புது history படைக்கிறார் “கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னாடி “லவ் டுடே” மற்றும் “டிராகன்” படங்களில் நடித்து கோலிவுட்டில் தன்னை ஒரு முக்கிய நடிகராக நிலைநிறுத்திக் கொண்டவர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்த “எல்.ஐ.கே” திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூல் வாரி வராத நிலையில், பிரதீப் இப்போது புதிய பாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார் – தயாரிப்பாளர் என்ற அவதாரத்தில்!

“PR SHOW” என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கும் பிரதீப், இதன் மூலம் முதல் படத்தையும் அறிவித்திருக்கிறார்.இந்த புதிய படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இவருடன் அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். குறிப்பாக, அஸ்வத் மாரிமுத்து இயக்குனராகவும் அறியப்பட்டவர் என்பதால், இவர் இந்த படத்தில் நடிப்பது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

படத்திற்கான கதையை பிரதீப் ரங்கநாதனே எழுதியிருக்கிறார் என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான அம்சம். இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனின் PR TEAM-ல் இருக்கும் 6 நபர்கள் இணைந்து இயக்குகிறார்கள். இவர்கள் “ALPHA UNIT” என்ற பெயரில் அறிவிப்பு வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் – தனிநபர் இயக்குனர் இல்லாமல், ஒரு நண்பர்கள் குழு இணைந்து இயக்கும் இந்த முயற்சி புதுமையான ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே “கோமாளி” மூலம் இயக்குனராக தன் திறமையை காட்டியவர் என்பதால், இப்போது தயாரிப்பாளராக மாறுவது பெரிய ஆச்சரியம் இல்லைதான். ஆனால் தனி இயக்குனர் இல்லாமல் நண்பர்கள் குழு ஒன்றை “ALPHA UNIT” ஆக அறிமுகப்படுத்தி இயக்க வைப்பது – இது கோலிவுட்டில் ஒரு அரிதான முயற்சி. இது வெற்றி பெற்றால், இளம் தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய வழியை திறக்கக்கூடும். “எல்.ஐ.கே” படம் கொடுத்த சறுக்கலுக்கு பிறகு, பிரதீப் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தன் career-ஐ மறுபடி வேகப்படுத்த முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. மமிதா பைஜு-அஸ்வத் மாரிமுத்து இணைவும் fans-க்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனி இயக்குனர் இல்லாம குழு ஒன்றை வெச்சு படம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதனின் இந்த முயற்சி, வரும் காலத்தில் இளம் இயக்குனர்களுக்கு ஒரு புது வழியை காட்டக்கூடும்.”

Leave a Comment