பிரபல ஹிந்தி நடிகரும் முன்னணி ஹீரோவுமான அமீர் கான், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘Sitaare Zameen Par’ திரைப்படம், திரையரங்குகளில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் ஓடிடி தளங்களில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், “ஓடிடியில் வெளியிடமாட்டேன்” என அமீர் கான் அறிவித்துள்ளார்.

மாறாக, இந்தப் படத்தை YouTube-ல் Pay-Per-View முறையில் நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளார். அவரது Aamir Khan Talkies யூடியூப் சேனலில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், ரசிகர்கள் ₹100 செலுத்தி இந்தப் படத்தை காணலாம்.
https://twitter.com/i/status/1950212783099851220
ஓடிடி தளங்கள் ரூ.125 கோடி வரை ஒப்பந்தம் செய்ய முன்வந்த போதும், “எனக்கு 125 கோடி வேண்டாம்… 100 ரூபாய் போதும்” என நடிகர் அமீர் கான் கூறி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.