manaiyadi sastram 2024 | மனையடி சாஸ்திரம் 2024
பொதுவாக மனையடி சாஸ்திரம் என்பது ஒரு மனையில் கட்டப்படும் வீட்டின் அளவு அகல நீளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று எந்த அகல நீளத்தில் வீட்டின் அறைகள் இருந்தால் என்ன பலன்கள் மற்றும் நன்மைகள் உண்டாகும்? வீட்டில் சுவர்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? இப்படி வீட்டின் அளவை குறித்து முழுமையாக விளக்குவதே மனையடி சாஸ்திரம். இங்கு நாம் 6 அடியில் முதல் தொடங்கி 100 அடி வரை வீடு மற்றும் அதன் அறைகளின் அளவு இருந்தால் அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் மற்றும் நன்மைகள் என்ன என்பதை பற்றியும், வீட்டின் சுவர் எவ்வளவு உயரம் இருந்தால் என்ன பலன் என்பது பற்றியும் விரிவாக பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், நல்ல பலன்கள் தரும் எண்களை கொண்டு வீடு மற்றும் அதன் அறைகளின் அகல நீளத்தை அமைப்பது .
manaiyadi sastram 2024
06 அடி- நன்மை உண்டாகும் |
07 அடி- வீட்டிற்கு தரித்தரம் உண்டாகும் |
08 அடி- பாக்கியம் கிடைக்கும் |
09 அடி- வீட்டில் பீடை ஏற்படும் |
10 அடி- நோயற்ற வாழ்வு |
11 அடி- பால் சாதமுண்டு (பாக்கியம் சேரும்) |
12 அடி- செல்வ செழிப்பு குறைந்து போகும் |
13 அடி- அனைவரும் பகைவராவார்கள் |
14 அடி- நஷ்டம், மன கஷ்டம் ஏற்படும் |
15 அடி- நல்ல காரியம் தடைபடும் |
16 அடி- மிகுந்த செல்வம் உண்டாகும் |
17 அடி- அரசனை போல் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும் |
18 அடி- வீட்டு மனை சீர்குலையும் |
19 அடி- மனைவி, மக்கள் யாரேனும் மரணம் அடைவார்கள் |
20 அடி- இராஜயோகம் கிடைக்கும் |
21 அடி- கல்வி செழிக்கும், பசுவின் பாக்கியம் கிடைக்கும் |
22 அடி- சந்தோஷம் அதிகரிக்கும், பகைவர் அச்சம் கொள்வார்கள் |
23 அடி- நோயுடன் இருக்க கூடிய நிலை வரும் |
24 அடி- வயது குன்றும், மத்திம பலன் |
25 அடி- தெய்வ பலன் கிடைக்காது |
26 அடி- இந்திரனை போல வாழ்வீர்கள் |
27 அடி- செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் |
28 அடி- வீட்டில் செல்வம் அதிகரிக்கும், தெய்வ அருள் கிடைக்கும் |
29 அடி – பால் பாக்கியம் கிடைக்கும், செல்வம் சேரும் |
30 அடி – வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும் |
31 அடி – இறைவனின் அருள் பாக்கியம் கிடைக்கும் |
32 அடி – திருமால் (முகுந்தன்) அருள் பெற்று வாழ்வார் |
33 அடி – வீட்டில் நன்மை கிடைக்கும் |
34 அடி – குடிகள் விட்டொழியும் (தீமை பயக்கும்) |
35 அடி – லக்ஷ்மி கடாட்சம் நீங்காமல் இருக்கும் |
36 அடி – அரசரோடு அரசாள்வார் |
37 அடி – இன்பம், லாபம் உண்டு |
38 அடி – வீட்டில் ஆவிகள் குடியிருக்கும் |
39 அடி – இன்பமும், சுகமும் உண்டாகும் |
40 அடி – எப்போதும் சலிப்புடன் தென்படுவீர்கள் |
41 அடி – இன்பமும் செல்வமும் உண்டாகும் |
42 அடி – லக்ஷ்மி தங்கியிருப்பாள் |
43 அடி – வீட்டில் தீங்கு உண்டாகும் |
44 அடி – கண்களில் பாதிப்பு ஏற்படும் |
45 அடி – சற்புத்திரர் உண்டு, சகல பாக்கியம் கிடைக்கும் |
46 அடி – தீமை உண்டாகக்கூடும் |
47 அடி – வறுமை இருக்கும் |
48 அடி – குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவு ஏற்படும் |
49 அடி – மூதேவி குடியிருப்பாள் |
50 அடி – பசுவினுடைய பால் பாக்கியம் கிடைக்கும் |
52 அடி – தான்யம் அதிகரிக்கும் |
56 அடி – வம்சம் விருத்தியாகும் |
60 அடி – பொருள் உற்பத்தி, செல்வ செழிப்பு அதிகரிக்கும் |
64 அடி – சகல செல்வங்கள் அனைத்தும் வந்தடையும் |
66 அடி – சற்புத்திரர் பலன் கிடைக்கும் |
68 அடி – நஷ்டம் விலகி லாபம் உண்டாகும் |
71 அடி – பெரும்புகழ், யோகம் இருக்கும் |
72 அடி – செல்வ பாக்கியம் சேரும் |
73 அடி – குதிரைகள் கட்டி ஆட்சி செய்வர் |
74 அடி – அதிக செல்வம் உண்டாகும் |
77 அடி – யானைகள் கட்டி வாழ்வான் |
79 அடி – காளை விருத்தி |
80 அடி – மகாலட்சுமி வாசம் செய்வாள் |
84 அடி – சகல பாக்கியமும் கிடைக்கும் |
85 அடி – செல்வம் அதிகரித்து செல்வந்தராக வாழ்வார்கள் |
88 அடி – சௌபாக்கியத்துடன் வாழ்வார் |
89 அடி – பல வீடுகள் கட்டி வாழ்வர் |
90 அடி – யோகம் கிடைக்கும் |
91 அடி – சகல சம்பத்தும் கிடைக்கும் |
92 அடி – சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் |
93 அடி – கடல் கடந்து பொருள் ஈட்டுவர் |
95 அடி – வெளிநாடுகளிலிருந்து பணத்தினை சேர்ப்பீர்கள் |
96 அடி – அயலதேசம் செல்வார் |
97 அடி – செல்வந்தராக வாழ்வார் |
98 அடி – பல தேசங்கள் செல்வர் |
99 அடி – ராஜ்ஜியம் ஆழ்வார் |
100 அடி – இறைவன் அருள்பெற்று சமுதாயத்தில் சிறந்த மனிதனாக போற்றப்படுவர். |
மேலும் படிக்க :rahu ketu peyarchi 2023 tamil