‘சப்த சாகரதாச்சே எல்லோ’ (Sapta Saagaradaache Ello) படத்துல அந்த நீல நிற சுடிதார்ல வந்து நம்ம ஊர் பசங்க மனச கொள்ளையடிச்ச நம்ம ருக்மிணி வசந்த், இப்போ அடுத்த லெவலுக்கு போயிட்டாங்க.
ஏற்கனவே விஜய் சேதுபதியோட ‘ஏஸ்’ (Ace), சிவகார்த்திகேயனோட ‘மதராஸி’ (Madharasi) -னு தமிழ்ல பிஸியா இருக்குற இவங்க, இப்போ ஒரு பிரம்மாண்டமான Royal Character-ல நடிக்கப் போறாங்களாம். அதுவும் ஒரு தெலுங்கு படத்துல!

தெலுங்கு நடிகர் சர்வானந்த் (Sharwanand) ஜோடியாகத் தான் ருக்மிணி கமிட் ஆகியிருக்காங்க.தூக்கடு புகழ் இயக்குனர் ஸ்ரீனு வைட்லா தான் இந்தப் படத்தை இயக்குறாரு. அவரோட படங்கள்னாலே ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட்னு பக்காவா இருக்கும்.இந்தப் படத்துல ருக்மிணி வசந்த் ஒரு Princess (இளவரசி) கெட்டப்ல வராங்களாம். மாடர்ன் டிரஸ்ஸுக்கே நம்ம ஆளுங்க சொக்கிப் போவாங்க, இதுல ராயல் லுக்-னா சொல்லவா வேணும்? ஏற்கனவே கன்னடம், தமிழ்ல இருக்குற இவங்க, இப்போ இந்தத் தெலுங்கு படம் மூலமா Pan-India லெவல்ல வைரல் ஆக பிளான் பண்ணிட்டாங்க.
யஷ் கூட ‘டாக்சிக்’ (Toxic) படத்துலயும் ருக்மிணி ஒரு முக்கியமான ரோல் பண்றாங்க. அடுத்த ஒரு வருஷத்துக்கு இவங்க தான் சோசியல் மீடியாவோட National Crush-ஆ இருப்பாங்க போல!

நம்ம ருக்மிணி வசந்தை இளவரசி கெட்டப்ல பார்க்க நீங்க Waiting-ஆ? இல்ல அவங்களுக்கு மாடர்ன் லுக் தான் செட் ஆகும்னு நினைக்கிறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க!