தமன்னா – விஜய் வர்மா இடையே பிரேக்அப் வதந்தி: ஹோலி கொண்டாட்டத்தால் குழப்பம்!|Tamannaah-vijay-varma-breakup-rumors
நடிகை தமன்னா மற்றும் பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மா காதலில் இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. இருவரும் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன், நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்று, வெளிநாட்டு பயணங்களுக்கும் சென்றனர்.
சமீபத்தில், அவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. தமன்னா விரைவில் திருமணம் செய்ய விரும்பியதாகவும், விஜய் வர்மா அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த பிரேக்அப் செய்திகள் எவ்வளவு உண்மை என்பதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் வீட்டில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில், தமன்னா மற்றும் விஜய் வர்மா ஒருசேர கலந்து கொண்டதை வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதனால், “இருவரும் நிஜமாகவே பிரிந்துவிட்டார்களா, அல்லது இது வெறும் வதந்தியா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.