47 வயதிலும் கொள்ளை அழகு!47 vayatthilum kollai azhagu
நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளால் இணையத்தை கலக்கி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பி வந்த அவருக்கு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து சோலோ ஹீரோயினாக இடம் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார்.
பாலிவுட் சினிமாவில் நிலையாக இருப்பதற்காக ஜோதிகா தனது உடல் கட்டுக்கோப்பை சிறப்பாக பேணிக்கொண்டு வருகிறார். உடற்பயிற்சி செய்வதையும், அதில் அடையும் முன்னேற்றத்தையும் அடிக்கடி வீடியோக்கள் மூலம் பகிர்ந்து வருகிறார்.
அவரது நடிப்பில் உருவாகியுள்ள டப்பா கார்டெல் என்ற வலைத்தொடர் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ஜோதிகா மிகவும் ஸ்டைலிஷ் அவதாரத்தில் தோன்றியிருந்தார்.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், 47 வயதிலும் முப்பது வயது பெண் போல் இளமையுடன் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். பாலிவுட் நடிகையைப் போல் மாறி, மற்றுமொரு லெவலில் ஜோதிகா காட்சி அளிக்கிறார்.