மார்ச் 19 மோதல் உறுதி துரந்தர்  படத்திற்காக பின்வாங்க முடியாது – ராக்கி பாய் ஓபன் டாக்

கே.ஜி.எப் (KGF) திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி டாப் ஹீரோவாக  உயர்ந்திருப்பவர் நடிகர் யாஷ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ (Toxic) திரைப்படம் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தொடர்பாக தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

yash toxic march 19 clash கடந்த  2025 ஆண்டே அறிவிக்கப்பட்டபடி, ‘டாக்சிக்’ திரைப்படம் 2026, மார்ச் 19-ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி எனத் பட குழு அறிவித்தனார்  . ஆனால், அதே தேதியில் பிரபல ஹிந்தி படமான ‘துரந்தர் 2’ (Dhurandhar 2) வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய படங்கள் மோதிக்கொண்டால் வசூல் பதிக்கப்படும்  அதை  தவிர்க்க ‘டாக்சிக்’ ரிலீஸ்  தேதி தள்ளிப்போகலாம் என வதந்திகள் பரவின.

yashs upcoming film toxic set to release on march 19 20261742649811 0

இது குறித்து யாஷ் தரப்பில் கூறப்பட்டது , “நாங்கள் ரிலீஸ் தேதியை ஒரு வருடத்திற்கு முன்பே அறிவித்துவிட்டோம். அதே தேதியில் மற்றொரு படம் வருவதாக இருந்தால், ஒரு மரியாதைக்குக் கூட எங்களிடம் கலந்து பேசவில்லை. தென்னிந்திய சினிமாவில் தயாரிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் பேசி ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் பழக்கம்  உண்டு, ஆனால் பாலிவுட்டில் அந்தப் பழக்கம் இல்லை” என யாஷ் ஓபன் ஆக  தெரிவித்துள்ளாராம். இதன் மூலம் குறித்த  தேதியில் ‘டாக்சிக்’ படம் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

பாலிவுட் படத்துடன் நேரடியாக மோதத் தயாராக இருக்கும் யாஷின் இந்த துணிச்சலான முடிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 19-ல் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! இதற்க்கு முன்பாக kgf  1 ஷாருகான்  zero படத்துடன் மோதி kgf வெற்றி பெற்றது kgf 2 தமிழ்நாட்டில் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் மோதி வெற்றி பெற்றது மீண்டும் ஹட்ரிக் ஹிட் கொடுப்பார யாஷ்.

 யாஷ் பாலிவுட் மோதுவது சரியான முடிவா ?

Leave a Comment