10கோடி செலவு செஞ்சாலும் இந்த பிரபலம் கிடைச்சிருக்காது!
இந்திய திரை உலகில் தற்போது மிகவும் பிஸியான மற்றும் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து தனது கலைப் பயணத்தை தொடங்கிய இவர், பாலிவுட்டில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.
தென்னிந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோயினி
‘சீதா ராமம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, மிருணாள் தாகூருக்கு தெலுங்கு திரையுலகில் (Tollywood) தனி மார்க்கெட்டே உருவானது எனலாம். அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் அதே வேளையில், தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இவர் சில தமிழ் படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. தற்போது இந்தி படங்களில் மிகுந்த பிஸியாக நடித்து வருகிறார்.

வைரலான தனுஷ் – மிருணாள் திருமண வதந்தி
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் நடிகை மிருணாள் தாகூர் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் பிப்ரவரி 14 திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்றும் பரபரப்பான வதந்திகள் பரவின. தனுஷ் விவாகரத்திற்குப் பிறகு இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம் என்றாலும், மிருணாள் தாகூரின் பெயர் அடிபட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால், இது திரைத்துறையில் பேசுபொருளாக மாறியது.
10 கோடி ரூபாய் செலவு செய்தாலும்-இந்த பிரபலம் கிடைச்சிருக்காது!மிருணாள் அதிரடி
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மிருணாள் தாகூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அதில் உண்மை இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
மேலும், இந்த வதந்தி பரவிய விதம் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. “நான் 10 கோடி ரூபாய் பணம் செலவு செய்திருந்தால் கூட, எனக்கு இந்த அளவிற்கு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது” என நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார்.

தன்னைப்பற்றி பரவிய தவறான செய்தியை அவர் எடுத்துக்கொண்ட விதம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பையும் பாராட்டும் பெற்றுள்ளது. மேலும் இந்தி தெலுங்கு படங்களில் busy உள்ளவர் தமிழ் பக்கம் தலை காட்டவேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு உள்ளார் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.