Pirai Thedum Song Lyrics in Tamil: செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் லிஸ்டில் இருக்கும் திரைப்படம் ‘மயக்கம் என்ன’. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான “பிறை தேடும் இரவிலே உயிரே“ பாடலின் முழு வரிகளை (Mayakkam Enna Pirai Thedum Lyrics)
Mayakkam Enna Pirai Thedum Song Details
| பாடல் விவரங்கள் | தகவல்கள் |
| திரைப்படம் (Movie) | மயக்கம் என்ன (2011) |
| பாடல் (Song) | பிறை தேடும் இரவிலே |
| இசையமைப்பாளர் (Music) | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| பாடலாசிரியர் (Lyrics) | தனுஷ் |
| பாடகர்கள் (Singers) | ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி |

Pirai Thedum Song Lyrics in Tamil – பிறை தேடும் இரவிலே வரிகள்
பெண்:
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா…
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா…
இருளில் கண்ணீரும் எதற்கு? மடியில் கண்மூட வா…
அழகே இந்த சோகம் எதற்கு? நான் உன் தாயும் அல்லவா…
ஆண்:
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
பெண்:
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா…
(இசை)
பெண்:
அழுதால் உன் பார்வையும் அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீர்க்கும் போதுமா?
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும்
இன்பம் தெய்வம் தந்த சொந்தமா?
ஆண்:
என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி…
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
பெண்:
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா…
(இசை)
பெண்:
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்!
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே…
ஆண்:
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா?
தினம் கொள்ளும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்…
(இசை)
READ MORE :Anal Mele Panithuli Song Lyrics in Tamil – Vaaranam Aayiram