tamil engal

0
115
Tamil engal
Tamil engal

Tamil engal : இலக்கண ரீதியாக தமிழ் மொழிக்கென உருவான எண்களே தமிழ் எண்கள். இந்த எண்கள் அனைத்தும் தற்போது நாம் பயன்படுத்தும் எண்கள் போல அல்லாமல் எழுத்து வடிவில் இருக்கும். நமது முன்னோர்களின் கல்வெட்டுகளில் தமிழ் எண்களை நம்மால் காண முடிகிறது. ஆனால் பல்வேறு படையெடுப்புகளின் காரணமாகவும் கலாச்சார மாறுபாடுகளின் காரணமாகவும் பிற மொழி எண்களின் பயன்பாடு அதிகமாகி அதுவே தற்போது நடைமுறையிலும் உள்ளது. எனினும் தமிழ் எண்கள் பற்றி அறிவதும் அதை எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்வதும் தமிழர்களாக நமது கடமையாக உள்ளது. அந்த வகையில் இங்கே நாம் ஒன்று முதல் நூறு வரை உள்ள தமிழ் எண்களை குறிப்பிட்டுள்ளோம்.

read more:manaiyadi sastram 2024| மனையடி சாஸ்திரம் 2024

தமிழ் எண்கள்: என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை( number) குறிக்கும். இந்த எண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒன்றாக காணப்படும். தமிழ் எண்கள் தற்போது பெரு வழக்கில் இல்லை. உதாரணத்திற்கு, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழங்காலத்து தமிழ் முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது.   அந்த வகையில் 1 முதல் 100 வரை உள்ள தமிழ் எண்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Tamil engal
Tamil engal

 

Tamil engal

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
0 சுழியம் 
1 ஒன்று 
2 இரண்டு 
3 மூன்று 
4 நான்கு 
5 ஐந்து 
6 ஆறு 
7 ஏழு 
8 எட்டு 
9 ஒன்பது 
10 பத்து  ௧௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
11 பதினொன்று ௧௧
12 பன்னிரண்டு ௧௨
13 பதின்மூன்று ௧௩
14 பதினான்கு ௧௪
15 பதினைந்து ௧௫
16 பதினாறு ௧௬
17 பதினேழு ௧௭
18 பதினெட்டு ௧௮
19 பத்தொன்பது ௧௯
20 இருபது ௨௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
21 இருபத்தி ஒன்று ௨௧
22 இருபத்தி இரண்டு ௨௨
23 இருபத்தி மூன்று ௨௩
24 இருபத்தி நான்கு ௨௪
25 இருபத்தி ஐந்து ௨௫
26 இருபத்தி ஆறு ௨௬
27 இருபத்தி ஏழு ௨௭
28 இருபத்தி எட்டு ௨௮
29 இருபத்தி ஒன்பது ௨௯
30 முப்பது ௩௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
31 முப்பத்தி ஒன்று ௩௧
32 முப்பத்தி இரண்டு ௩௨
33 முப்பத்தி மூன்று ௩௩
34 முப்பத்தி நான்கு ௩௪
35 முப்பத்தி ஐந்து ௩௫
36 முப்பத்தி ஆறு ௩௬
37 முப்பத்தி ஏழு ௩௭
38 முப்பத்தி எட்டு ௩௮
39 முப்பத்தி ஒன்பது ௩௯
40 நாற்பது ௪௦
read more  home business ideas in tamil

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
41 நாற்பத்து ஒன்று ௪௧
42 நாற்பத்தி இரண்டு ௪௨
43 நாற்பத்து மூன்று ௪௩
44 நாற்பத்தி நான்கு ௪௪
45 நாற்பத்தைந்து ௪௫
46 நாற்பத்தி ஆறு ௪௬
47 நாற்பத்தி ஏழு  ௪௭
48 நாற்பத்தி எட்டு ௪௮
49 நாற்பத்தொன்பது ௪௯
50 ஐம்பது ௫௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
51 ஐம்பத்தி ஒன்று ௫௧
52 ஐம்பத்தி இரண்டு  ௫௨
53 ஐம்பத்தி மூன்று  ௫௩
54 ஐம்பத்தி நான்கு  ௫௪
55 ஐம்பத்தி ஐந்து  ௫௫
56 ஐம்பத்தி ஆறு  ௫௬
57 ஐம்பத்தி ஏழு  ௫௭
58 ஐம்பத்தி எட்டு  ௫௮
59 ஐம்பத்தி ஒன்பது  ௫௯
60 அறுபது  ௬௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
61 அறுபத்து ஒன்று ௬௧
62 அறுபத்து இரண்டு  ௬௨
63 அறுபத்து மூன்று  ௬௩
64 அறுபத்து நான்கு ௬௪
65 அறுபத்து ஐந்து  ௬௫
66 அறுபத்து ஆறு  ௬௬
67 அறுபத்து ஏழு  ௬௭
68 அறுபத்து எட்டு  ௬௮
69 அறுபத்து ஒன்பது  ௬௯
70 எழுபது  ௭௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
71 எழுபத்து ஒன்று ௭௧
72 எழுபத்து இரண்டு  ௭௨
73 எழுபத்து மூன்று  ௭௩
74 எழுபத்து நான்கு ௭௪
75 எழுபத்து ஐந்து  ௭௫
76 எழுபத்து ஆறு  ௭௬
77 எழுபத்து ஏழு  ௭௭
78 எழுபத்து எட்டு  ௭௮
79 எழுபத்து ஒன்பது  ௭௯
80 எண்பது  ௮௦

 

எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
81 எண்பத்து ஒன்று ௮௧
82 எண்பத்து இரண்டு  ௮௨
83 எண்பத்து மூன்று  ௮௩
84 எண்பத்து நான்கு ௮௪
85 எண்பத்து ஐந்து  ௮௫
86 எண்பத்து ஆறு  ௮௬
87 எண்பத்து ஏழு  ௮௭
88 எண்பத்து எட்டு  ௮௮
89 எண்பத்து ஒன்பது  ௮௯
90 தொண்ணூறு  ௯௦
Tamil engal
Tamil engal
எண்கள்  தமிழ் சொல்  தமிழ் எண்கள் 
91 தொண்ணுற்று ஒன்று ௯௧
92 தொண்ணுற்று இரண்டு  ௯௨
93 தொண்ணுற்று மூன்று  ௯௩
94 தொண்ணுற்று நான்கு ௯௪
95 தொண்ணுற்று ஐந்து  ௯௫
96 தொண்ணுற்று ஆறு  ௯௬
97 தொண்ணுற்று ஏழு  ௯௭
98 தொண்ணுற்று எட்டு  ௯௮
99 தொண்ணுற்று ஒன்பது  ௯௯
100 நூறு  ௧௦௦
read more  Gratuity meaning in Tamil | பணிக்கொடை என்றால் என்ன

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا