Why is the first trimester of pregnancy so important in tamil?: ஏன் கருத்தரித்த முதல் மூன்று மாதம் மிகவும் முக்கியம்

    2
    125
    Why is the first trimester of pregnancy so important in tamil
    Why is the first trimester of pregnancy so important in tamil

    Why is the first trimester of pregnancy so important in tamil: தாய்மை என்னும் சொல்லால் பெண்மையை பெருமைப்படுத்தும் மிக முக்கிய காலம் தான் கர்ப்பகாலம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்கள், கடுமையான பரீட்சையை சந்திக்க வேண்டிய மாதம் என்றே சொல்லலாம்.

    அதிலும் தாய்மைக்கு, அறிமுகமாகும் முதல் கர்ப்ப காலத்தை சந்திக்கும் பெண்களுக்கு இந்த முதல் மூன்று மதங்களை கடப்பது மிகுந்த சிரமமானதாக இருக்கும்.

    கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில், தலை சுற்றறல், வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, மலச்சிக்கல் உள்ளிட்ட உபாதைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அதோடு, மனம் சார்ந்த அதிக குழப்பங்களால் மிகுந்த மன உளைச்சலும், எதிர்காலம் பற்றிய பயமும் கர்ப்பம் தரித்த பெண்ணை தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

    பெண்ணிலிருந்து தாயாக உருமாறும் போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். இத்தகைய சூழலில் கர்ப்பம் தரித்த பெண்ணிற்கு குடும்பத்தாரின் அன்பும் அரவணைப்பும் மிகவும் அவசியமான ஒன்று.

    BEST HEALTHY BREAKFAST IN TAMIL: காலையில சாப்பிட இதுதான் சரியான டிஷ் எது?

    ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில், கூட்டு குடும்பம் என்ற ஒன்று இல்லாமல் போனதால்குடும்பத்தாரின் அரவணைப்பு பல நகர பெண்களுக்கு கிடைப்பதே இல்லை. அவ்வாறு இருக்க கர்ப்பகால பராமரிப்புகளை இளம் பெண்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்.

    நம் வீட்டு பெரியவர்கள், ‘கருத்தரித்த மூன்று மாதங்களுக்கு அடக்கமா இரு, இல்லனா புள்ளைக்கு குறை வந்திரும் ‘அப்படினு சொல்வாங்க. அதற்கு அர்த்தம் கரு, கர்ப்பப்பையில் பதியமான முதல் மூன்று மாதங்களில் தான் குழந்தையின் முக்கிய உறுப்புகள் வளர ஆரம்பிக்கும். இந்த கால கட்டத்தில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    முதல் மூன்று மாதங்களில் உருவாகும் முக்கிய உறுப்புகள்

    Why is the first trimester of pregnancy so important in tamil: உயிர் வாழ மிக முக்கிய உள் உறுப்பாக இருப்பது இதயம். இந்த உறுப்பு முதல் மூன்று மாதத்தில் தான் உருவாகும். அதோடு கர்ப்பம் தரித்த முதல் செய்தியை உறுதி செய்வதே குழந்தையின் இதய துடிப்பின் ஓசைதான்.
    இதயத்திற்கு அடுத்தபடியாக உடல் இயக்கத்தை முறை படுத்தும் அதி முக்கிய உறுப்பான மூளை உருவாகிறது . அடுத்த மூன்று மாதத்திற்கு ஒரு முறை மூளை வளர்ச்சியடையும்.
    அடுத்து எலும்புகளின் இயக்கத்திற்கு முக்கியமான சிறு மூட்டுகளும், அதனை சுற்றி தசைகளும் முதல் மூன்று மாதத்தில் தான் உருவாகிறது.
    மூட்டுகள் உருவாவதைத் தொடர்ந்து கால்கள், கைகள், விரல்கள், நகங்கள் உருவாக துவங்கும்.
    குழந்தை உருவாவதில் மிக முக்கிய காலகட்டமான இந்த முதல் மூன்று மாதங்களில் தாய்மையடைந்த பெண், ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளால் பலதரப்பட்ட மனம் மற்றும் உடல் ரீதியான மாற்றங்களையும், பிரச்னைகளையும் சந்திப்பார்கள்.
    இந்த சமயத்தில் ஆரோக்யமான உணவும், அதேபோல் குடும்ப உறவுகளின் அன்பும் குழந்தை,குறைகளின்றி முழு ஆரோக்யமாக பிறக்க உறுதுணையாக இருக்கும்.
    read more  GINGER CHUTNEY 2023: வயிற்று நோய்களை குணமாக்கும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?

    2 تعليقات

    ترك الرد

    من فضلك ادخل تعليقك
    من فضلك ادخل اسمك هنا