விஜய் ஆண்டனி சம்பளத்தில் தீட்ர் மாற்றம் காரணம் என்ன

விஜய் ஆண்டனி-யும் விக்ரம் பாதையில்  கோலிவுட்டில் புதிய சம்பள யுகம் தொடங்குகிறதா?

தமிழ் சினிமாவில் நடிகர்கள் லாபத்தில் பங்கு அடிப்படையில் சம்பளம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை தயாரிப்பாளர்கள் தரப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஹிந்தி, தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் இந்த முறையில் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழிலும் அதே மாதிரி நடக்கணும் என்பது தொழிலின் தேவையாக உணரப்பட்டது.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

மந்திரமூர்த்தி படத்திற்காக விஜய் ஆண்டனி-யின் புதிய முடிவு!

அதற்கு முதல் அடி வைத்தவர் விக்ரம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்திற்கு விக்ரம் லாபத்தில் பங்கு அடிப்படையில் சம்பளம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இப்போது அதே பாதையில் விஜய் ஆண்டனி பயணிக்கிறார். ‘அயோத்தி’ படம் இயக்கிய மந்திரமூர்த்தி இயக்கும் புதிய படத்திற்காக, தயாரிப்பு நிறுவனமான குட் ஷோ இந்த கோரிக்கையை வைக்க, Vijay Antony உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். பிச்சைக்காரன், சலீம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் இவர், இப்போது சம்பள விஷயத்திலும் வித்தியாசமான முடிவு எடுத்திருக்கிறார். விக்ரம், விஜய் ஆண்டனிக்கு பிறகு அடுத்து யார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது.

Leave a Comment