Song Details: Anal Mele Panithuli Lyrics in Tamil
-
Movie: Vaaranam Aayiram
-
Music: Harris Jayaraj
-
Lyrics: Thamarai
-
Singer: Sudha Raghunathan

Anal Mele Panithuli Lyrics in Tamil
Pallavi
அனல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவளினி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காகத் தடையினி
Charanam 1
எந்தக் காற்றின் அலாவலில்
மலரிதழ்கள் விரிந்திடுமோ…
எந்தத் தேடலின் வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ…
ஒரு சிறு வலி இருந்தது வீண்
இதயத்திலே… இதயத்திலே…
உனதிரு விழி தடவியதால்
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
உதிரட்டும்மே உடலின் திரை
அதுதானினி நிலாவின் கரை… கரை…
Charanam 2
சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா… பல முறையா…
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா…
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுமா கடலலையே…
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழி சொல்லுமா கலங்கரை கரையே…
உனதலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட…
Pallavi
அனல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவளினி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காகத் தடையினி