கமல்ஹாசன் பாலிவுட்டை விட்டு ஏன் விலகினார்? அண்டர்வேர்ல்ட் தொடர்பே காரணமா?

vetri

June 27, 2026

kamal haasan பாலிவுட்டை விட்டு ஏன் விலகினார்? அண்டர்வேர்ல்ட் தொடர்பே காரணமா?

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தி சினிமாவிலும் தனது முத்திரை பதித்த நடிகர் kamal haasan பாலிவுட்டை விட்டு விலகிய காரணம் என்ன என்று இப்போது பலரும் கேட்கிறார்கள். 2017ல் இந்தியா டுடே சவுத் கான்கிளேவில் அவர் வெளிப்படையாக பேசிய கருத்துகள் இப்போது மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.

kamal haasan பாலிவுட்டில் எப்படி வெற்றி பெற்றார்?

1974ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ஐனா படத்தில் சிறிய வேடத்துடன் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கமல். உண்மையான திருப்புமுனை 1981ல் வந்தது. ரதி அக்னிஹோத்ரியுடன் நடித்த ஏக் துஜே கே லியே படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று கமலை பாலிவுட்டில் நிலை நிறுத்தியது. அதைத்தொடர்ந்து 1983ல் சிரிதேவியுடன் நடித்த சத்மா படம் கமலுக்கு தேசிய விருது கொடுத்தது. இது தமிழில் மூன்றாம் பிறை என்ற படத்தின் இந்தி வடிவம். அமிதாப் பச்சனுடன் கெரஃப்தார், சாகர் என பல படங்களில் நடித்து பாலிவுட்டில் உறுதியான இடத்தை தக்கவைத்திருந்தார்.

kamal haasan
kamal haasan

பிறகு ஏன் விலகினார்?

1985க்கு பிறகு கமல் பாலிவுட்டிலிருந்து ஒதுங்கினார். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1997ல் அவ்வை சண்முகியின் இந்தி வடிவமான சாச்சி 420 மூலம் திரும்பினார். பின்னர் ஹே ராம், அபய், மும்பை எக்ஸ்பிரஸ், விஷ்வரூபம் உள்ளிட்ட இருமொழி படங்களில் நடித்தார்.

2017ல் நடந்த நிகழ்வில் விலகலுக்கான காரணத்தை கமல் நேரடியாக சொன்னார். தான் அங்கே “ஏழை உறவினன்” மாதிரி உணர்ந்ததாகவும், ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடிக்கும் நடிகர்களுடன் போட்டியிடுவது சோர்வாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பாலிவுட்டில் அண்டர்வேர்ல்ட் தொடர்புகளும் கருப்பு பணமும் அதிகமாக இருந்ததால் அங்கிருக்க விரும்பவில்லை என்று தெளிவாக சொன்னார். “கருப்பு பணத்துடன் எந்த தொடர்பும் வேண்டாம் என்று என் சகோதரருடன் சேர்ந்து முடிவு எடுத்தேன்” என்று அவர் பகிர்ந்தார்.

இந்தி சினிமாவிலிருந்து விலகியதோடு தன் கொள்கைகளிலும் உறுதியாக நின்ற கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.  போன வருடம்  மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் வெளியாகியிருந்தது.

Leave a Comment