96 படத்தில் இளம் விஜய் சேதுபதியாகவும் த்ரிஷாவாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஜோடி மீண்டும் ஒரே திரையில் பார்க்க போகிறோம் . லவ் அண்ட் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 26ல் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லவ் அண்ட் வார் படம் பற்றி என்ன தெரியும்?
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்களுடன் மூத்த நடிகர் கே.பாக்கியராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ஆரிஜின் ஸ்டுடியோஸ் சார்பில் கண்ணா பாஸ்கர் தயாரித்திருக்கிறார்.குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் கதையாக இந்தப் படம் உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

போஸ்டரை வெளியிட்டது யார்?
லவ் அண்ட் வார் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக ஜூன் 26ல் நடிகர் ஜீவா மற்றும் ஆர்யா இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டனர். வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகியது. 96 படத்தில் காட்டிய நடிப்புத் திறனால் ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த இந்த ஒன்றிணைந்த ஜோடியின் திரைப்படம் என்பதால் லவ் அண்ட் வார் படம் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்திருக்கிறது.