TEA AFTER FOOD HABIT: சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் நீங்கள் உங்களுக்குக்கான அட்வைஸ்

    1
    238
    TEA AFTER FOOD HABIT
    TEA AFTER FOOD HABIT

    TEA AFTER FOOD HABIT: பெரும்பாலும் நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் இருக்கிறது. அதுபோல சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் என்றாவது இது நல்லதா அல்லது கெட்டதா என்று யோசித்தது உண்டா..? சரி அதற்கான பதிலை இங்கு காணலாம்.

    தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.

    பொதுவாக சாப்பிட்ட உடன் டீ குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் காரணம் தேயிலைகள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. மேலும் டீ மற்றும் காபியில் உள்ள டானின் இரும்பு சத்து உறிஞ்சுதலுக்கு இடையூறாக இருக்கிறது.

    HEALTH BENEFITS OF GARLIC IN TAMIL: பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்

    தேநீரில் உள்ள பீனாலிக் போன்ற சேர்மங்கள் வயிற்றில் இரும்பு வளாகங்களை உருவாக்குகிறது. இதன் காரணமாக நாம் புரதச்சத்து உள்ள உணவை உட்கொண்டால், டீயில் உள்ள அமிலம் புரத உள்ளடக்கத்தை கடினமாக்குகிறது.

    இதனால் செரிமான பிரச்சனை, அலற்சி, மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    TEA AFTER FOOD HABIT
    TEA AFTER FOOD HABIT

    சூடாக காபி, டீ குடிப்பவரா நீங்கள்

    TEA AFTER FOOD HABIT: வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.

    அதிகமான சூட்டுடன் டீ குடித்தால், உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.

    இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.

    பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம். பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது. சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது. மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு. அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

    வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.

    read more  NANDU SOUP BENEFITS IN TAMIL 2024 | நண்டு சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

    1 تعليق

    ترك الرد

    من فضلك ادخل تعليقك
    من فضلك ادخل اسمك هنا