Priyanka Deshpande- அம்மா ஆகிறார் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவியில் தனது கலகலப்பான தொகுப்பால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த Priyanka Deshpande, இப்போது தன் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Priyanka Deshpande-உம் வாசி சச்சியும் போட்ட க்யூட் வீடியோ!
கடந்த ஆண்டு இலங்கை தொழிலதிபர் வாசி சச்சியை திருமணம் செய்துகொண்ட Priyanka, இப்போது இருவரும் சேர்ந்து “டாடி”, “மம்மி” என எழுதப்பட்ட தொப்பிகள் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார்கள். “நிறைமாத நிலவே வா” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்த வீடியோ சில நிமிடங்களிலேயே வைரலாகி விட்டது. சின்னத்திரை பிரபலங்கள், சக தொகுப்பாளர்கள், ரசிகர்கள் என எல்லாரும் கமெண்ட்டில் வாழ்த்துகளை அள்ளி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகும் ஆங்கரிங்கை விடாமல், சென்னை-இலங்கை என இரண்டு இடங்களிலும் பயணம் செய்தும் கெரியரை தொடர்ந்த Priyanka-வுக்கு இந்த நல்ல செய்தி மேலும் மகிழ்ச்சியை சேர்க்கிறது.