ராம் சரண் மூன்று ஆண்டுகள் பிறகு மகள் Klin Kaara-வின் புகைப்படம் வெளியிட்டார்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான Ram Charan, அப்பலோ குடும்பத்தின் வாரிசு உபாசனா கொனிடேலாவை திருமணம் செய்துகொண்டார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருந்த இந்த தம்பதிக்கு 2023-ல் ‘Klin Kaara’ என்ற பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து கடந்த ஜனவரியில் Sivram மற்றும் Anveera Devi என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தனர்.

மூன்று வருஷமா ஒரே ஒரு போட்டோ கூட இல்லாம இப்போ வெளியானது எப்படி?
Klin Kaara பிறந்தது முதல் அவரது முகம் எந்த சமூக வலைதளத்திலும் தெரியாமல் ராம்சரண் தம்பதி மிகவும் கவனமாக பாதுகாத்து வந்தனர். ஆனால் Klin Kaara-வின் மூன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த தம்பதி முதன்முறையாக மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளனர். RRR மற்றும் Rangasthalam போன்ற படங்களில் வெற்றி கண்ட Ram Charan, தனிப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் குடும்பத்தை மிக அன்போடு பாதுகாப்பதில் கவனமாக இருப்பார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்தது தான். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை கொட்டி வருகின்றனர்.