Haiku movie படப்பிடிப்பு நிறைவு Netflix OTT உரிமை கைப்பற்றியது!

Haiku movie படப்பிடிப்பு wrap up — Netflix-ஓட நம்பிக்கை வாங்கிய படம்!

அமைதியான தலைப்பு மட்டுமில்லாமல், அமைதியாகவே உருவாகி வந்த Haiku movie-யின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. 90 நாட்களுக்கும் மேலாக நான்கு கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படக்குழு post production பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

Haiku movie-யின் அணி முழுவதும் யார் யார்?

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியிருக்கிறார். நடிகர் ஏகன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், மைம் கோபி, இந்துமதி, ஜென்சன், இஸ்மத்தா பானு, ‘டாக்டர்’ சிவா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

திரைக்கதையை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்க, கூடுதல் திரைக்கதை ஹரி ஹரன் ராம் எழுதியிருக்கிறார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு, சக்தி பிரணேஷ் படத்தொகுப்பு, சித்து குமார் இசை மற்றும் பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

Haiku movie
Haiku movie

படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குநர் யுவராஜ், படைப்புச் சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், அர்ப்பணிப்புடன் உழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். Haiku ரசிகர்களுக்கு மனதை வருடும், உணர்வுபூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான OTT உரிமையை Netflix பிரீமியம் தொகைக்கு கைப்பற்றியிருக்கிறது. இது படத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment