முளைகட்டிய பச்சை பயறுகளை சாப்பிடுவாதல் கிடைக்கும் நன்மைகள்
mulaikattiya pachai payaru benefits in tamil :பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் பச்சையாக முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் சில நன்மைகளும் கூடவே சில அபாயங்களையும் கொண்டு உள்ளது
நமது உடலுக்கு வலிமை மற்றும் ஊக்கம் தரும் பயறு வகைகளில் பச்சைப் பயறு முக்கிய இடம் பெற்றுள்ளது . இவற்றில் வைட்டமின்கள் A, வைட்டமின் B, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் E உள்ளது. மற்றும் , மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, தாமிரம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அதிக ஃபைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, குறைவான கலோரி, வைட்டமின் சி, ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் காப்பர் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்னாக்ஸாக முளைகட்டிய பயறுகள் குறிப்பிடப்படுகின்றன.
read more:butter in tamil | வெண்ணெய் தீங்கு விளைவிக்காது
ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று அழைக்கபடுகிறது . முளைகட்டிய பயறு வகைகளை பலர் பச்சையாகவும் உண்கிறார்கள் சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள். பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் முளைகட்டிய பச்சை பயறுகளை சாப்பிடுவதால் சில நன்மைகளும் கூடவே சில அபாயங்களையும் கொண்டு உள்ளது.

முளைகட்டிய பச்சை பயறுகள் என்பவை விதை மற்றும் குழந்தை தாவரம் உள்ளிட்ட இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது . சாலட்ஸ் முதல் சாண்ட்விச் வரை பலவற்றிலும் பச்சையாக முளைகட்டிய பச்சை பயறுகளை பயன்படுத்தலாம். ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் முளைகட்டும் பயறுகளில் பல்வேறு வகைகள் உள்ளது . ஸ்ப்ரவுட்டட் கிரெயின்ஸ், பீன் ஸ்ப்ரவுட்ஸ், வெஜிடபிள் ஸ்ப்ரவுட்ஸ், நட்ஸ் & சீட் ஸ்ப்ரவுட்ஸ் என பல உள்ளன.
மஸ்ட்டர்ட் கிரீன் என்னும் போது வெஜிடபிள் ஸ்ப்ரவுட்ஸ் , ப்ரோக்கோலி, அல்ஃப்ல்ஃபா ஸ்ப்ரவுட்ஸ் மற்றும் ரெட் க்ளோவர் உள்ளிட்ட பல இருக்கிறது . கிட்னி பீன்ஸ் என்னும் போது பீன் ஸ்ப்ரவுட்ஸ்,ஸ்னோ பீஸ் மற்றும் பிளாக் பீன் ஸ்ப்ரவுட்ஸ் உள்ளிடா சிலவற்றை அடங்கும். ஸ்ப்ரவுட்டட் கிரெயின்ஸ் வகையில் வீட்கிராஸ் ஸ்ப்ரவுட்ஸ் மற்றும் குயினோவா அடக்கம். நட்ஸ் & சீட் ஸ்ப்ரவுட்ஸ் என்னும் வகையில் எள் விதைகள், சூரியகாந்தி விதை மற்றும் பூசணி விதைகள் ஸ்ப்ரவுட்ஸ்கள் வருகின்றது . சரி இப்போது முளைகட்டிய பச்சை பயறு அல்லது தானிய வகைகளை பச்சையாக உண்பதால் நமக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளை பார்க்கலாம் .
நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்| mulaikattiya pachai payaru benefits in tamil
ரா ஸ்ப்ரவுட்ஸ் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகிறது . இது தொடர்பான ஆய்வில் ரா ஸ்ப்ரவுட்ஸ் amylase enzyme செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது . எனவே இது சர்க்கரைகளை சரியாக உடைத்து ஜீரணிக்க உடலை பயன்படுத்த செய்கிறது.
செரிமான மேம்பாடு| mulaikattiya pachai payaru benefits in tamil
பச்சையாக சாப்பிடும் பொது முளைகட்டிய பச்சை பயறு வகைகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்யஉதவுகிறது . பச்சையாக எடுத்து கொள்ளப்படும் போது ஸ்ப்ரவுட்ஸ்களில் குறைவான ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ் உள்ளது . இது செரிமான செயல்முறையின் போது தாதுக்களை உறிஞ்சுவதை உடல் வலிமை செயல்பட உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது| mulaikattiya pachai payaru benefits in tamil
தினசரி உணவில் சமைத்து முளைகட்டிய பச்சை பயறு வகைகளை சேர்த்து கொள்வது நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும். இந்த பழக்கம் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படும் HDL-ஐ அதிகரிப்பு செய்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எடுத்து காட்டியுள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் ரா ஸ்ப்ரவுட்ஸ், கெட்ட கொலஸ்ட்ரால், மொத்த கொழுப்பு மற்றும் பிளட் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முளை கட்டிய பச்சைப் பயற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளது . இவை உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் பாதுகப்பாக இருக்கலாம்.
பெண்களுக்கு நல்லது| mulaikattiya pachai payaru benefits in tamil
முளைகட்டிய பச்சை பயறில் காணப்படும் பொட்டாசியம், தாமிரம் , மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த சோகையை சமாளிக்க பெரிதும் உதவி செய்கிறது. இதனால் இந்த முளைகட்டிய பச்சை பயறு பெண்களுக்கு மிகச் சிறந்த வலிமை தரும் உணவாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துகொள்ளும் .
read more:butter benefits in tamil | வெண்ணெய் நன்மைகள்
முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வதால் கல்லீரல் ,செரிமானம்,நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் கட்டுபடுத்தும்.
தீமைகள்| mulaikattiya pachai payaru benefits in tamil
ரா ஸ்ப்ரவுட்ஸ்களை இருப்பதால் ஏற்பட கூடிய முக்கிய அபாயம் ஃபுட் பாய்சனிங் ஆகும். ஏனென்றால் பச்சையாக உட்கொள்ளப்படும் போது முளைகட்டிய பச்சை பயறு வகைகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும் இவை உணவுகளால் பரவும் நோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். விதைகள் ஈரப்பதமான நிலையில் முளைப்பதால் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்க வாய்ப்புகளும் அதிகம்.

எனவே பயறுகளை முளைகட்டிய பின் அப்படியே சாப்பிடாமல் நன்கு வேகவைத்து பிறகு சாப்பிடுவது நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க உதவும் . பல ஆய்வுகளின்படி பெரும்பாலான ஆரோக்கியமான மக்களுக்கு, பச்சையாக அல்லது லேசாக சமைத்த வேக வைத்த ஸ்ப்ரவுட்ஸ்களை சாப்பிடுவதால் நன்மைகள் கிடைப்பதை விட, அபாயங்கள் சற்று அதிகம் இருக்கும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆபாயங்களும் இருக்கும் . ஸ்ப்ரவுட்ஸ் தவறான முறையில் வளர்க்கப்பட்டால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.