என்னைப்பற்றி வரும் அந்த குப்பையான செய்திகள்.” மௌனம் கலைத்த அதிதி ராவ் ஹைதரி
அவரது கண்கள் எப்போதும் ஒரு அமைதியான கதையைச் சொல்லும். ஆனால், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அந்த கண்களில் ஒருவிதமான பிடிவாதமும், வெளிப்படைத்தன்மையும் தென்பட்டது. தன்னைச் சுற்றி சுழலும் வதந்திகளுக்கு அவர் கொடுத்த பதில், ஒரு முதிர்ச்சியான கலைஞரின் குரலாக ஒலித்தது.தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் அதிதி ராவ் ஹைதரி. மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ முதல் சமீபத்திய ‘ஹீராமண்டி’ வரை இவரது பயணம் மிகவும் தனித்துவமானது. ஆனால், திரையில் அவர் காட்டும் அந்த மென்மைக்கு நேர்மாறாக, நிஜ வாழ்க்கையில் தன்னைப்பற்றிப் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளை அவர் எதிர்கொள்ளும் விதம் மிகவும் துணிச்சலானது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி உலா வரும் வதந்திகள் குறித்து அவர் மனந்திறந்து பேசினார். “சில நேரங்களில் இணையத்தில் என்னைப்பற்றி வரும் சில குப்பையான (Random rubbish) செய்திகளைப் பார்க்க நேரிடுகிறது. ஆரம்பத்தில் அது சங்கடமாக இருந்தாலும், இப்போது
Read more












