பரிமளா & கோ முதல் நாள் வசூல் எவ்வளவு? குடும்பங்கள் கூட்டமாக பார்க்கிறார்கள்!

குடும்ப படங்களுக்கு தனி முத்திரை பதிக்கும் இயக்குநர் பாண்டிராஜின் புதிய படமான பரிமளா & கோ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலேயே ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கும் இந்தப் படம், குடும்பங்களை கூட்டமாக திரையரங்குகளுக்கு இழுத்து வருகிறது.

பரிமளா & கோ — எப்படிப்பட்ட படம்?

தலைவன் தலைவி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பிறகு பாண்டிராஜ் இந்த முறை தனது வழக்கமான ஜானரிலிருந்து வெளியே வந்து வித்தியாசமான முயற்சி செய்திருக்கிறார். ஒரு கொலையால் குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார். பாபநாசம் மாதிரியான கதைக்களமாக தோன்றினாலும் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். படத்தின் கிளைமேக்ஸில் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்தும் சொல்லப்பட்டிருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள்.ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அவந்திகா, சாண்டி மாஸ்டர், மிஷ்கின் என நட்சத்திர நிரம்பிய அணியுடன் உருவாகியிருக்கும் இந்தப் படம், ப்ரிவியூ ஷோவிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

பரிமளா & கோ படம் முதல் நாள் வசூல்
பரிமளா & கோ படம் முதல் நாள் வசூல்

 

முதல் நாள் வசூல் எவ்வளவு?

Sacnilk தரவுகளின்படி, பரிமளா & கோ படம் முதல் நாளில் 1,238 ஷோக்களில் ரூ.1.19 கோடி வசூலித்திருக்கிறது. முதல் நாளே ஒரு கோடியை தாண்டியிருப்பது குடும்ப படங்களுக்கு நல்ல தொடக்கம் என்று சொல்லலாம்.காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருப்பதால் குடும்பங்கள் கூட்டமாக திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாசிட்டிவ் வாய்மொழி பரவ பரவ வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று படக்குழு நம்பிக்கையுடன் இருக்கிறது.

Leave a Comment